முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதார் அட்டை இருந்தால்தான் ஏழுமலையானை தரிசிக்க முடியும்

புதன்கிழமை, 9 மார்ச் 2016      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை  - ஆதார் அடையாள அட்டை இருந்தால்தான் ஏழுமலையான் தரிசனத்துக்கு அனுமதிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்கள் மற்றும் வெளிநாட்டினர் வருகை தருகின்றனர். இலவச தரிசனம், திவ்ய தரிசனம் மற்றும் ரூ.300 டிக்கெட் பெற்று சிறப்பு தரிசனம் செய்து வருகின்றனர். ஏழுமலையானை தரிசனம் செய்ய ரூ.300க்கான தரிசன டிக்கெட் மற்றும் ஆர்ஜித சேவை டிக்கெட் பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட வேண்டும். இதற்காக விண்ணப்ப படிவத்தில் ஆதார் எண் தெரிவிக்க மாற்றம் செய்யும்படி தகவல் தொழில் நுட்ப அதிகாரிகளுக்கு, தலைமை செயல் அலுவலர் சாம்பசிவராவ் உத்தரவிட்டுள்ளார்.

இதன்மூலம் ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஆர்ஜித மற்றும் ரூ.300 டிக்கெட் பெறும் பக்தர்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட உள்ளது. சூரிய கிரகணத்தையொட்டி திருப்பதி கோயில் நடை சாத்தப்பட்டது. கிரகணம் முடிவடைந்த தைதொடர்ந்து, நேற்று காலை 10 மணிக்கு மீண்டும் கோயில் நடை திறக்கப்பட்டது. கோயில் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை, ஏகாந்தமாக செய்யப்பட்டது. காலை 11 மணியில் இருந்து பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்