முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நித்தியானந்தா சாமி தரிசனம்

சனிக்கிழமை, 12 மார்ச் 2016      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை  - திருமலையில் உள்ள திருப்பதி எழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா உட்பட 15 சீடர்களுடன்   சாமி தரிசனம் செய்தார். முன்னதாக, ரஞ்சிதா உடன் நித்யானந்தா வி.ஐ.பி பிரேக் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தி நித்யானந்தாவை மட்டும் வி.ஐ.பி தரிசனத்திற்கு அனுமதித்தனர். நடிகை ரஞ்சிதாவும், 15 சீடர்களும் 300 ரூபாய் டிக்கெட் எடுத்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

நித்யானந்தா கடந்த 2 நாட்களாக ஆந்திர மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பிரசித்தி பெற்ற ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயி லிலும், திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலிலும் நடிகை ரஞ்சிதா மற்றும் சீடர் புடைசூழ அவர் சுவாமி தரிசனம் செய்தார். ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு சென்ற நித்யானந்தா, ரஞ்சிதா மற்றும் சீடர்களை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தரிசனத்துக்கான ஏற்பாடுகளை செய்தனர். புதிய தோற்றத்தில் சடை முடியுடன் காணப்பட்ட நித்யானந்தாவை பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுக்க முயன்றனர்.

அப்போது அவரது சீடர்கள் தடுக்க முயன்று, பத்திரிகையாளர்களை தள்ளிவிட்டதால் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நித்யானந்தா, ரஞ்சிதா உட்பட 15 சீடர்களுடன் வியாழன் இரவு திருமலை வந்தார். அவர் பத்மாவதி விசாரணை மையத்தில் விஐபிக்கள் தங்கும் விருந்தினர் மாளிகையில் அறைகள் கேட்டார். அங்கு பணியில் இருந்தவர்கள் அறைகள் காலி இல்லை எனக்கூறி அனுப்பி வைத்தனர். பின்னர் சன்னிதானம் அறைகள் ஒதுக்கீடு பகுதிக்கு வந்த நித்யானந்தா மற்றும் அவரது சீடர்கள் வரிசையில் நின்று அறை ஒதுக்கீடு பெற்றனர்.  வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் செல்ல தேவஸ்தான அதிகாரிகளிடம் பரிந்துரை கடிதத்தை கொடுத்தனர்.

ஆனால் அதிகாரிகள் அந்த கடிதத்தை நிராகரித்து விஐபி தரிசனத்துக்கு அனுமதி மறுத்தனர். இதையடுத்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு நித்யானந்தாவுடன் ஒரு சீடர் மட்டும் விஐபி தரிசனத்தில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து வெள்ளிகிழமை காலை நித்யானந்தா ஒரு சீடருடன் சென்று தரிசனம் செய்தார்.  வெள்ளிக்கிழமையன்று மதியம் ரஞ்சிதா உட்பட 15 சீடர்கள் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்று சுவாமியை தரிசனம் செய்தனர். தரிசனம் முடித்து கோயிலுக்கு வெளியே வந்த நித்யானந்தாவை அவரது சீடர்கள் சூழ்ந்து, பாதுகாப்பு வளையம் அமைத்து வெளியே அழைத்து வந்தனர்.

நித்யானந்தா, ரஞ்சிதா மற்றும் சீடர்கள் ஏழுமலையானை தரிசித்தனர். ரஞ்சிதா துறவி கோலத்தில் கழுத்தில் ருத்ராட்சம் மாலை, விபூதி அணிந்து வந்திருந்தார். அவர்களின் வித்தியாசமான தோற்றத்தைக் காண பக்தர்கள் முண்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  நித்யானந்தாவின் சீடர்கள் கோயில் வளாகத்தில் பாதுகாப்பு என்ற பெயரில் ஏற்படுத்திய பரபரப்பு அப்பகுதியில் திரண்டிருந்த பக்தர்களை அதிர்ச்சியடைய செய்ததோடு கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.  நித்யானந்தாவின் சர்ச்சைகள் உலகறிந்த விசயம் என்பதால் துறவிகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் அளிக்க முன்வரவில்லை என்று ஆந்திர மாநில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்