முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு சதவீத கலால் வரி விதிப்புக்கு எதிர்ப்பு: தங்க நகை விற்பனையாளர்கள் தொடர்ந்து கடையடைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 13 மார்ச் 2016      வர்த்தகம்
Image Unavailable

தங்க நகை விற்பனைக்கு ஒரு சதவீதம் கலால் வரி விதிக்க படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டது. இதைத் தொடந்து நாடு முழுவதும் தங்க நகை விற்பனையாளர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். மார்ச் 2 ம் தேதியிலிருந்து கடைகளை அடைத்து வருவதால், தங்க நகை விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக நிதி அமைச்சக தகவலறிந்தவர்கள் கூறியதாவது:

தங்க நகை விற்பனையாளர்கள் கலால் வரி தொடர்பான புகார்கள் கூறுகின்றனர். இந்த பிரச்சினை தொடர்வதைவிட அதற்கு ஒரு தீர்வு எட்டப்பட வேண்டும். தங்க நகை விற்பனையாளர்கள் எப்போது வேண்டுமானாலும் கலால் வரி அதிகாரிகளை சந்திக்கலாம். கடந்த வாரம் தங்க நகை விற்பனையாளர்கள் பிரதிநிதிகள் குழு நிதியமைச்சரை சந்தித்த போது உடனிருந்த நிதியமைச்சக அதிகாரி ஒருவர் இதை குறிப்பிட்டார்.

தங்க நகை விற்பனையாளர்களது கவலைகள் தீர்க்கப்படும் என நிதி அமைச்சர் கடந்த வாரம் உறுதி அளித்துள்ளார். ஆனாலும் கடைகளை தொடர்ந்து அடைத்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்று கூறினார். தங்க நகை வர்த்தகத்தில் இதுவரை உற்பத்தி வரி விதிக்கப்படவில்லை. இந்த நிலையில் பல்வேறு துறையிலும் கருப்பு பண பணபரிமாற்றத்தைக் கட்டுப்படுத் தும் வகையில், பரிவர்த்தனை களை வரி வரம்புக்குள் கொண்டு வர அரசு முயற்சித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக தங்க நகை விற்பனையை முறைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

தங்க நகை விற்பனையாளர்கள் ஒரு சதவீத உற்பத்தி வரி விதிப்பை ஏற்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நிதி அமைச்சருடனான கூட்டத்தில் கலந்து கொண்ட வைர மற்றும் தங்க நகை வர்த்தக கூட்டமைப்பின் இயக்குநர் அசோக் மினவாலா, இது தொடர்பாக பேசியபோது, கூடுதல் வருமானம் கிடைப்பது முக்கிய விஷயமல்ல, இந்த வரியை வாடிக்கையாளர்கள் கட்ட வேண்டும் என்பதுதான் எங்கள் எதிர்ப்புக்கு காரணம். தங்க நகை விற்பனையாளர்களின் இந்த பிரச்சினையை உற்பத்தி வரித் துறை சிக்கலாக்குகிறது. இதுதான் நாங்கள் கடையடைப்பு செய்வதற்கு காரணம் என்று குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தில் கடந்த வெள்ளி அன்று, இந்த கூடுதல் வரி விதிப்பு 12 கோடி ரூபாய்க்கும் அதிகமான பரிவர்த்தனையில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு மட்டும் தான் என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியது. ஒரு நிதி ஆண்டில் ரூ.12 கோடி பரிவர்த் தனை செய்யும் தங்க நகை விற்பனையாளர் மட்டும் உற்பத்தி வரி செலுத்த வேண்டும். ரூ.12 கோடிக்குள் பரிவர்த்தனையில் ஈடுபடும் விற்பனையாளருக்கு அதற்கு அடுத்த நிதியாண்டில் ரூ.6 கோடி வரை வரிவிலக்கு அளிக்கப்படும். சிறு தங்க நகை விற்பனையாளர்களுக்கு 50 லட்சம் வரை மார்ச் 2016 வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி வரியை மாதந்தோறும் செலுத்த வேண்டும். இதற்கு ஏற்ப காலாண்டுக்கு ஒரு முறை வரிதாக்கல் செய்ய நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன.  இந்த நிலையில் தங்க நகை விற்பனை உற்பத்தி வரிக்கு கூடுதல் கணக்கு ஆவணங்களை பராமரிக்க வேண்டும் என்றும், விற்பனையாளர்கள் மத்தியப்படுத்தப்பட்ட பதிவு வாங்க வேண்டும் என்று கூறியுள்ளதற்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்