முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கிகளுக்கு 4 நாள் தொடர் விடுமுறை ஏ.டி.எம்.களில் பண தட்டுப்பாட்டு அபாயம் ?

செவ்வாய்க்கிழமை, 15 மார்ச் 2016      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி  - நாட்டின் பலபகுதிகளில் வரும் 24ம் தேதி தொடஙஅகி தொடர்ந்து 4 நாட்கள் தேசிய வங்கிகளுக்கு விடுமுறை வரவிருப்பதால் ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த மாதம் 24-ம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாட்டப்பட இருக்கிறது. தென் மாநிலங்களில் இந்த பண்டிகைக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. இருப்பினும் வடமாநிலங்களில் மிகசிறப்பாக இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் அனைத்து வடமாநிலங்களிலும் இந்த தினத்துக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.

அதற்கு அடுத்த நாள் மார்ச் 25 புனித வெள்ளி, இதுவும் அரசு விடுமுறை தினமாகும். மறுநாள் 27-ம் தேதி 4வது சனிக்கிழமை என்பதால் தேசிய வங்கிகளுக்கு விடுமுறை தினமாக உள்ளது. தனியார் வங்கிகளும் இந்த நடைமுறையை பின்பற்றி வருகின்றன. 28-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து 4 நாட்கள் பெரும்பாலான மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை தினமாக இருப்பதால் ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு ஏற்படுவதறஅகான அபாயம் உள்ளது. தொடர் விடுமுறை எதிர்பார்த்து ஏடிஎம்களில் கூடுதல் பணம் நிரப்பப்படுமா என்ற எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்