முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் போலி பிரசாதம் விற்றவர் கைது

வெள்ளிக்கிழமை, 18 மார்ச் 2016      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை - திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதம் உலக பிரசித்தி பெற்றது. இவற்றை வீட்டில் தயாரித்து, போலி பிரசாதங்களை பக்தர்களுக்கு விற் பனை செய்த தேவஸ்தான ஒப்பந்த ஊழியரை திருமலை போலீஸார் கைது செய்தனர்.  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் மட்டுமின்றி தோசை, வடை, சர்க்கரை பொங்கல், புளியோதரை, ஜிலேபி உள்ளிட்ட பல்வேறு வகை பிரசாதங்கள் ஏழுமலையானுக்கு படைக்கப்பட்டு அவை சில ஆர்ஜித சேவை பக்தர் களுக்கு விநியோகம் செய்யப் படுகிறது.

லட்டு பிரசாதம் தவிர்த்து, மற்றவை சாதரண பக்தர்களுக்கு கிடைக்காததால் அந்த பிரசாதங்கள் அதிக விலைக்கு கள்ள சந்தையில் விற்கப்படுகின்றன.  இந்நிலையில் திருமலையில் உள்ள பிரசாதங்கள் தயாரிக்கும் இடமான ‘போட்டு’ எனும் இடத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் திருச்சானூரை சேர்ந்த ரமணா என்பவர் ஜிலேபி பிரசாதத்தை வீட்டிலேயே தயாரித்து அதிக விலைக்கு விற்பது தெரிய வந்தது. திருமலை போலீஸார் ரமணாவை நேற்று கைது செய்து அவரிடம் இருந்த போலி ஜிலேபி பிரசாதங்களை பறிமுதல் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago