முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலி எண்ணெய் நிறுவன பங்குகள் 6 சதவீதம் வரை உயர்வு

வெள்ளிக்கிழமை, 18 மார்ச் 2016      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி  - பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து எண்ணெய் நிறுவன பங்குகள் அதிகபட்சம் 6 சதவீதம் வரை உயர்ந்தன. பாரத் பெட்ரோலியம் நிறுவன பங்கு 5.67 சதவீதம் உயர்ந்து 862 ரூபாயில் முடிவடைந்தது. ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பங்கு 3.28 சதவீதமும், இந்தியன் ஆயில் நிறுவன பங்கு 2.64 சதவீதமும் உயர்ந்து முடிவடைந்தது.  நேற்று முன்தினம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.07 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 1.90 ரூபாயும் உயர்த் தப்பட்டது. மூன்று மாதங்களாக சரிந்துவந்த விலைகள் இப்போது உயரத் தொடங்கி இருக்கின்றன.

எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியும் 16 தேதியும் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைக்கின்றன.  நேற்றைய வர்த்தகத்தில் பங்குச்சந்தையை பொறுத்தவரை ஏற்ற இறக்கமாகவே இருந்தது. சென்செக்ஸ் 5 புள்ளிகள் சரிந்து 24677 புள்ளியிலும், நிப்டி 13 புள்ளிகள் உயர்ந்து 7512 புள்ளியிலும் முடிவடைந்தன.  அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை எதிர்பார்த்ததை விட குறைந்த முறையே வட்டி விகிதத்தை உயர்த்தும். முன்பு திட்டமிடப்பட்டிருந்த 4 முறைக்கு பதிலாக 2 முறை மட்டுமே வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு செய்யும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.  இந்த நிலையில் பங்குச்சந்தை மற்றும் கமாடிட்டி சந்தைக்கு அதிக முதலீடுகள் வந்தன. ஆயில் அண்ட் கேஸ் குறியீடு அதிகபட்சமாக 2 சதவீதம் உயர்ந்தது.  இதனால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்றைய வர்த்தகத்தில் 54 பைசா உயர்ந்தது. நேற்று வர்த்தகத்தின் முடிவில் ஒரு டாலர் 66.69 ரூபாயாக இருந்தது.  பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.07 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 1.90 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளதால் மூன்று மாதங்களாக சரிந்துவந்த விலைகள் இப்போது உயரத் தொடங்கி இருக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago