முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 22-ம் தேதி முதல் 4 நாள் பயணமாக ஜான் கெர்ரி ரஷ்யா செல்கிறார்

சனிக்கிழமை, 19 மார்ச் 2016      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - வரும் 22-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை 4 நாள் பயணமாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி ரஷ்யா செல்கிறார். அப்பொழுது சிரியா விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்த பேச்சுவார்த்தை இடம்பெறும் என்று தெரிகிறது. சிரியாவில் இருந்து தனது படைகளை ரஷ்யா திரும்பப்பெற துவங்கியிருக்கிறது. இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி வரும் 22-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

இந்த பயணத்தின் போது உக்ரைன் விவகாரம், மின்ஸ்க் ஒப்பந்தங்களை முழுமையாக நிறைவேற்ற எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், சிரியாவில் அரசியல் மாற்றத்தை கொண்டு வர எடுக்க வேண்டிய முடிவுகள், ஐ.எஸ். தீவிரவாதத்தை சிரியாவில் இருந்து முற்றிலுமாக அகற்றுவதற்கான நடவடிக்கைகள் ஆகியவை பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.  தொடர்ந்து 6 ஆண்டுகளாக சிரியாவில் உள்நாட்டுப்போர் நிலவி வந்த நிலையில், ஐ.நா. தலைமையிலான அமைதிப் பேச்சுவார்த்தை தற்பொழுது துவங்கவுள்ளது.இந்நிலையில், கடந்த 15-ம் தேதி முதல் ரஷ்யா,தனது படைகளை  சிரியாவில் இருந்து திரும்பப்பெற ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்