முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் கலாபவன் மணி மரணத்தில் மர்மம் நீடிப்பு: சிபிஐ விசாரணை நடத்த பாஜக வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 21 மார்ச் 2016      சினிமா
Image Unavailable

சாலக்குடி  - மலையாள நடிகர் கலாபவன் மணியின் மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடிப்பதை அடுத்து, சிபிஐ வசம் இவ்வழக்கு விசாரணையை ஒப்படைக்க வேண்டும் என கேரள பாஜகவினர் குரல் எழுப்பியுள்ளனர்.  தமிழ் மற்றும் மலையாள திரைப் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனி முத்திரை பதித்தவர் கலாபவன் மணி. திருச்சூர் மாவட்டம் சாலக்குடியில் கலா பவன் மணிக்கு விருந்தினர் தங்கும் வீடு ஒன்று உள்ளது. கடந்த 4-ம் தேதி இந்த வீட்டில் தனது நண்பர்கள் சிலருடன் அமர்ந்து மது அருந்தியபோது, அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட கலாபவன் மணி, சிகிச்சை பலனின்றி கடந்த 6-ம் தேதி உயிரிழந்தார்.  மருத்துவர்கள் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக தெரிவித்திருந்தனர். இதையடுத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தியபோது, மனைவி நிம்மிக்கும் அவருக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் ஏற்பட்டதில்லை என தெரியவந்தது. மேலும் கலாபவன் மணி எத்தனை துன்பம் வந்தாலும் அதை தாங்கும் திறன் படைத்தவர் என்றும் அவருடன் மது அருந்திய நண்பர்கள் மீது தான் சந்தேகம் வலுக்கிறது என்றும் அவரது சகோதரர் ராம கிருஷ்ணன் தெரிவித்திருந்தார். 

இதைத் தொடர்ந்து கடைசியாக கலாபவன் மணியுடன் மது அருந்திய பிரபல டிவி நடிகர் சாபு உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த சூழலில் சமீபத் தில் அளிக்கப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் கலா பவன் மணியின் உடலில் மிகுந்த விஷம் நிறைந்த பூச்சிக் கொல்லி மருந்து இருந்ததாக திடுக்கிடும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சாலக்குடியில் உள்ள அவரது விருந்தினர் வீட்டில் குற்றப்பிரிவு எஸ்பி உன்னி ராஜன் விரிவான சோதனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, தற்போதைக்கு கலாபவன் மணியின் மரணம் கொலையா? தற்கொலையா? என தெரிவிக்க முடியாது. விசாரணை நடந்து கொண்டிருப்பதால் மேற் கொண்டு எந்த தகவலையும் வெளியிட முடியாது, என்றார்.

  கலாபவன் மணியின் வங்கி பரி வர்த்தனைகள், பிரேத அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்துகள் ஆகியவை குறித்து விரிவாக விசாரிக்கப்பட்டு வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அந்த வீட்டில் இருந்து ரசாயனம் தொடர் பான சில தடயங்களை புலனாய்வு குழுவினர் சேகரித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் விரி வான விசாரணைக்காக கலாபவன் மணிக்கு நெருக்கமான 4 பேரை யும் போலீஸார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அதே சமயம், கலாபவன் மணியின் குடும்பத்தினரை மாநில பாஜக தலைவர் கும்மனம் ராஜசேகரன் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது கலாபவன் மரணத்தில் நீடிக்கும் மர்மத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியறுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago