முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புற்றுநோய் பாதித்த மலையாள இளம் நடிகர் ஜிஷ்னு திடீர் மரணம்

வெள்ளிக்கிழமை, 25 மார்ச் 2016      சினிமா
Image Unavailable

திருவனந்தபுரம், புற்றுநோயாள் பாதிக்கப்பட்டிருந்த மலையாள இலம் நடிகர் ஜிஷ்னு திடீரென மரணமடைந்தார்.

மலையாள படவுலகின் பழம்பெரும் நடிகர் ராகவனின் மகனாவார் ஜிஷ்னு. தந்தை நடிகர் என்பதால் குழந்தை நட்சத்திரமாக ஜிஷ்னு ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு என்ஜினீயரிங் படித்து வேலையில் சேர்ந்த ஜிஷ்னு  மீண்டும் ஆர்வம் காரணமாக திரையுலகில் புகுந்தார். இளம் நடிகராக வலம் வந்த ஜிஷ்னு நித்ரா, உஸ்தாத் ஓட்டல், பேங்கிங் ஹவர்ஸ் 10 டூ 4, அன்னும் இன்னும் என்னும், நம்மல் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார். நம்மல் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார். நம்மல் படத்தில் நடித்ததின் மூலம் கேரள அரசின் சிறந்த புதுமுக நடிகருக்கான விருதையும் பெற்றார்.

கடந்த சில ஆண்டுகளாக ஜிஷ்னு உடல்நலக்குறைவால் அவதிப்பட்டுவந்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதை கண்டு பிடித்தனர். இதற்காக தீவிர சிகிச்சை பெற்ற ஜிஷ்னு கடந்த ஆண்டு நோயில் இருந்து மீண்டார். அதன் பிறகு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்து அவரை பொது நிகழ்ச்சிகளிலும் சினிமா விழாக்களிலும் காணவில்லை. சில நாட்களுக்கு முன்பு அவர் இதுபற்றி பேஸ்புக்கில் கருத்து வெளியிட்டார், அதில் கொச்சியில் உள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் தனக்கு நோய் தொற்றி கொண்டதாகவும் கூறி இருந்தார்.

அவரது பேஸ்புக் பதிவை பார்த்த அதிர்ந்து போன ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து கருத்து வெளியிட்டனர். இந்நிலையில் நேற்று காலை 8 மணிக்கு நோயின் தீவிரத்தால் ஜிஷ்னு திடீரென மரணம் அடைந்தார். இந்த தகவலை அவரது உறவினர்கள் தெரிவித்தனர். ஜிஷ்னுவின் மனைவி தன்யா ராஜன் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரியில் அவரது உடலை பார்த்து கதரி அழுதனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago