முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் பிரதமர் மோடி பிரசாரம்: பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

சனிக்கிழமை, 26 மார்ச் 2016      அரசியல்
Image Unavailable

சென்னை, தமிழகத்தில் பிரதமர் மோடி பிரசாரம் செய்யவிருப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இதுகுறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:–

பாரதீய ஜனதா கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், அகில இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் உள்பட பல கட்சிகள் உள்ளன. ஏற்கனவே பிரதமர் மோடி அலை நாடு முழுவதும் வீசுகிறது. தமிழகத்திலும் அந்த அலை உள்ளது. தமிழக தலைவர்களை விட மோடி முதன்மை நிலையில் உள்ளார். சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்கு தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களை அழைத்துள்ளோம். கண்டிப்பாக பிரதமர் மோடி பிரசாரத்துக்கு வருவார்.

தேர்தல் தயாரிப்பு வேலைகளில் பா.ஜனதா மற்ற கட்சிகளை விட வேகமாக உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரவிரும்பும் கட்சிகளோடுதான் கூட்டணி குறித்து பேசி வருகிறோம், என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்