முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அழகர்கோவில் சித்திரை திருவிழா ஏப்.18ம்தேதி தொடங்குகிறது: 20ந்தேதி கள்ளழகர் மதுரைக்கு புறப்படுகிறார்

ஞாயிற்றுக்கிழமை, 27 மார்ச் 2016      ஆன்மிகம்
Image Unavailable

அழகர் கோவில்: அழகர் கோவில் சித்திரை திருவிழா வருகிற ஏப்ரல் 18ம்தேதியன்று துவங்குகிறது. 20ம்தேதியன்று கள்ளழகர் மதுரை நோக்கி புறப்பட்டு ஒவ்வொரு மண்டபத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 

 திருமாலிருஞ்சோலை, தென் திருப்பதி என்றுஆழ்வார்களால் பாடப்பெற்ற தலமாகவும் 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும் கள்ளழகர் திருக்கோவில் உள்ளது.  இந்த கோவிலின் மலை உச்சியில் வற்றாத நூபுர கங்கை என்னும் புனித நீர் ஊற்று உள்ளது. இங்கு நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை பெருந்திருவிழா மிக பிரசித்தி பெற்றது ஆகும். இந்த விழா ஏப்ரல் 18ம்தேதியன்று துவங்குகிறது.

அதனை அடுத்த நாளன்று, 19ம்தேதியும் அதே விழா கோவிலில் நடக்கிறது. இதில் இரு நாட்களும் சுவாமி புறப்பாடு நடைபெறும்.  ஏப்ரல் 20ம்தேதி மாலை, கள்ளழகர் என்ற சுந்தர ராஜ பெருமாள் கொண்டப்ப நாயக்கர்  மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கிருந்து, பதினெட்டாம் படி கருப்பணசுவாமி கோவில் முன்பாக சிறப்பு பூஜைகள் நடந்த பின்னர் அலங்கரிக்கப்பட்ட தங்க பல்லக்கில் சுந்தர ராஜ பெருமாள் மதுரையை நோக்கி புறப்படுகிறார்.

21ம்தேதி(வியாழக்கிழமை) அதிகாலையில் புதூர் மூன்று மாவடி பகுதியில் எதிர் சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து, வழிநெடுகிலும் உள்ள மண்டபங்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 22ம்தேதி காலை 6மணி முதல் 7மணிக்குள் தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளி மதுரை வைகையாற்றில் இறங்குகிறார்.

அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீய்ச்சுதலும் அண்ணாநகர் வழியாக வண்டியூர் வீரராகவ பெருமாள்கோவிலுக்கு சுவாமி சென்று அன்றிரவு அங்கு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.  23ம்தேதியன்று அதே கோவிலில் இருந்து சேஷ வாகனத்தில் கள்ளழகர் புறப்பட்டு காட்சி தருகிறார்.

தொடர்ந்து கருட வாகனத்தில், மண்டூக மகிரிஷிக்கு மோட்சம் கொடுத்தல்நடைபெறுகிறது. பின்னர் அன்றிரவு விடிய,விடிய, ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சி நடைபெறுகிறது.  24ம்தேதி அதிகாலையில், கள்ளழகர் மோகினி அவதாரத்தில் காட்சி அளிக்கிறார்.

பின்னர் அன்று பிற்பகல், ராஜாங்க திருக் கோலத்தில் கள்ளழகர் அனந்த ராயர் பல்லக்கில் எழுந்தருளி சேதுபதி மண்டபத்திற்கு புறப்படுகிறார். அன்றிரவு பூப்பல்லக்கு திருவிழா நடக்கிறது. 25ம்தேதி காலையில் வழி நடையாக அழகர் திருமலை நோக்கி செல்கிறார்.

அன்றிரவு அப்பன் திருப்பதி, கள்ளந்திரி, மண்டபங்களில் காட்சி அளிக்கிறார். 26ம்தேதி காலையில் அழகர் மலைக்கு வந்து சேர்ந்து கோவிலுக்குள் சென்று இருப்பிடம் சேருகிறார். இத்துடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

இந்த விழா ஏற்பாடுகளை அழகர் கோவில் தக்கார் வெங்கடாச்சலம் நிர்வாக அதிகாரி செல்லத்துரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago