Idhayam Matrimony

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்

ஞாயிற்றுக்கிழமை, 27 மார்ச் 2016      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி பெருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறு. திருவிழாவின் முத்தாயப்பாக நேற்று முன்தினம் முருகப்பெருமான், தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. விழாவில் சிகர நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடந்தது. இதனையொட்டி கோவில் வாசல் முன்பு பெரிய தேர் அலங்கரிக்கப்பட்டு தயாராக இருந்தது. இந்த நிலையில் உற்சவர் சன்னதியில் இருந்து தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டு தேரில் எழுந்தருளினார்.

இதனையடுத்து 6.33 மணிக்கு நிலையில் இருந்து தேர் புறப்பட்டது. இதே சமயம் கிறியசப்பரத்தில் விநாயகர் எழுந்தருளி முன்னே வலம் சென்றார். கோவில்யானை தெய்வானையும் தேரோட்டத்தில் முன்னே சென்றது. கோவில் வாசலில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து கிரிவல பாதையில் வலம் வந்தனர்.

தேரானது தென்றாலாய் ஆடி அசைந்து மெல்ல, மெல்ல நகர்ந்து ஊர்ந்த காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இதேபோல பக்தர்கள் எவுப்பிய ஆரோகரா கோஷம் மலை முழுவதுமாக எதிரொலித்தது. திருவிழாவின் நிறைவு நாளான இந்று கீர்த்த உற்சவம் நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்