முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறந்த நடிகர் அமிதாப்பச்சன் - நடிகை கங்கனா ரணாவத்: பாகுபலி படத்திற்கு தேசிய விருது: சிறந்த இசையமைப்பாளர் இளையராஜா

திங்கட்கிழமை, 28 மார்ச் 2016      சினிமா
Image Unavailable

புதுடெல்லி: பாகுபலி படம் சிறந்த சினிமாவிற்கான தேசிய விருதினை பெற்றது. சிறந்த நடிகராக அமிதாப்பச்சனும், சிறந்த நடிகையாக  கங்கனா ராவத்தும், சிறந்த இசையமைப்பாளராக இளையராஜாவும் தேர்வு செய்யப்பட்டார்கள்.
மத்திய அரசு ஆண்டுதோறும், திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது.

கடந்த 2015ம் ஆண்டிற்கான சிறந்த  படங்கள், சிறந்த நடிகர், சிறந்த நடிகை ஆகியோரை தேர்வு செய்வதற்காக, மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் கடந்த ஆண்டு வெளியான 167 படங்களை பார்த்தார்கள். அதில் இருந்து, தேர்வு செய்யப்பட்ட சிறந்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரது விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டன. பாகுபலி படத்திற்கு, சிறந்த படத்திற்கான தேசிய விருதினை பெற்றது.

சிறந்த ஸ்பெஷல் எபெக்ட் விருதினையும் அந்த படம் கைப்பற்றியது. பாகுபலி படம் சரித்திர பின்னணி கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. கிராபிக்ஸ் முறையில், நவீன தொழில் நுட்பத்தில் எடுக்கப்பட்ட அந்த படம் எடுக்கப்பட்டது. தெலுங்கு, தமிழ், இந்தி,மலையாளம் ஆகிய  மொழிகளில் பாகுபலி படம் வெளியானது. எஸ்.எஸ். ராஜ மவுலி இயக்கிய இந்த படத்தில் கதாநாயகனாக பிரபாஸ் நடித்தார்.

அனுஷ்கா, தமன்னா, கதாநாயகிகளான நடித்தார்கள். சத்யராஜ், ராணா, நாசர், ரம்யா கிருஷ்ணன், ரோகிணி ஆகியோர் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். ரூ 120கோடி செலவில் உருவான இந்த படம் வெளியான 4மொழிகளிலும் ரூ600கோடி வசூலை அள்ளி குவித்தது. சிறந்த நடிகராக அமிதாப்பச்சன்(படம் பிக்கு) சிறந்த நடிகையாக கங்கனா ரணாவத் (தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள்.  சிறந்த இயக்குனராக சஞ்சய் லீலா பஞ்சாலி(படம்பாஜிராவ் மஸ்தானி) அறிவிக்கப்பட்டார். சிறந்த இசையமைப்பாளர் விருது இளையராஜாவுக்கு கிடைத்துள்ளது.

தாரை தப்பட்டை படத்திற்காக அவர் இந்த விருதினை பெறுகிறார். தமிழில் சிறந்த படமாக விசாரணை தேர்வுசெய்யப்பட்டது. இதில் நடித்த சமுத்திரகனிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. தமிழில் சிறந்த நடிகைக்கான சிறப்பு விருதுக்கு ரித்திகா சிங்(படம், இறுதிச்சுற்று) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமிதாப்பச்சன் 4வது முறையாக சிறந்த நடிகர் விருதை பெறுகிறார். பிக்கு படத்தில் நடித்தற்காக அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

இந்தி, வங்காளம், ஆகிய இரு மொழிகளில் வெளியான இந்த படத்தில் தீபிகா படுகோனே, மவுசுமி சாட்டர்ஜி, இர்பான்கான் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.  இது முழு நீள நகைச்சுவை படம் ஆகும். ரூ42கோடியில் எடுக்கப்பட்ட பிக்கு படம் ரூ 141கோடி வசூல் பெற்றது. சிறந்த நடிகையாக தேர்வுசெய்யப்பட்டுள்ள கங்கனா ரணாவத்துக்கு தனு வெட்ஸ் படத்தில் சிறப்பாக நடித்ததற்கு விருது கிடைத்துள்ளது. மன நல விடுதியில் நடக்கும் சம்பவங்களை கொண்டு நகைச்சுவை ததும்பும் விதத்தில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

இதில் அவருக்கு ஜோடியாக மாதவன் நடித்துள்ளார். ஆனந்த் எல்.ராய் இயக்கிய இந்த படம் இந்தி, பஞ்சாபி, அரியான்வி ஆகிய மொழிகளில் வெளியானது. ரூ39கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த படம் ரூ243கோடி வசூல் செய்தது. திரைப்படத்துறைக்கு உகந்த  மாநிலமாக குஜராத் மாநிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்