முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசாமில் பா.ஜ.க.வெற்றி பெற்றால் நாக்பூரில்இருந்து ஆட்சி நடக்கும்: ராகுல் கிண்டல்

செவ்வாய்க்கிழமை, 29 மார்ச் 2016      அரசியல்
Image Unavailable

திபு(அசாம்),  அசாம் மாநிலத்தில் பா.ஜ.க. வெற்றி பெற்றால் நாக்பூரில் இருந்து ஆட்சி நடக்கும் என்றும் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி கேலியாக கூறினார்.

அசாம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இந்த நிலையில் அந்த மாநிலத்தில் உள்ள திபு நகரில் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி நேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

 அசாமில் பா.ஜ.க. வெற்றி பெற்றால் ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் உள்ள நாக்பூரில் இருந்துதான் ஆட்சி நடக்கும்.அல்லது பிரதமர் அலுவலகத்தில் இருந்து அசாம் மாநிலத்தின்  ஆட்சி நிர்வாகம் நடைபெறும்.இந்த மாநிலத்தில்  அமைதியை காங்கிரஸ் தழைத்தோங்க செய்துள்ளது. ஆனால் பாஜ.க வன்முறையையே தூண்டும். நமது கலாச்சாரத்தினை சிந்தித்து அதற்கேற்ப செயல்பட வேண்டும். நாட்டில் யாரும் அடக்கி ஆளப்படக்கூடாது. அசாமில் பா.ஜ.க.வினர் வாக்கு கேட்டு வருகிறார்கள். அவர்கள் இங்கிருந்து ஆட்சி நடத்த மாட்டார்கள்.

பா.ஜ.க செல்லும் இடங்களில் எல்லாம் வன்முறை ஏற்படுகிறது. அது அமைதியை சீர்குலைத்து வருகிறது. ஹரியானாவில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே ஜாட் மற்றும் இதர சமூகத்தினர் இடையே வன்முறை மோதல் ஏற்பட்டுள்ளது.

பா.ஜ.க.எங்கு சென்றாலும் அங்கு வன்முறை ஏற்படும் என்பதுதான் உண்மையாகும்.ஹரியானாவில் கடந்த 10ஆண்டுகளாக அமைதி நிலவியது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது எந்த வன்முறையும்  ஏற்படவில்லை. ஆனால் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே  அங்கு வன்முறை தலைதூக்க துவங்கிவிட்டது.

குஜராத்தில் என்ன ஏற்பட்டது என்பதை நீங்கள் பார்த்தீர்கள். பீகாரில் அவர்கள் தேர்தலுக்கு முன்பாக வன்முறையை தூண்ட முயன்றார்கள். அசாமிலும்  வன்முறையை பரவச்செய்ய அவர்கள் முயற்சிக்கிறார்கள். அவர்கள் உங்களையோ அல்லது அசாமை பற்றியோ நினைக்க மாட்டார்கள். தங்கள் தத்துவார்த்துவத்தை நாடுமுழுவதும் திணிக்க வேண்டும் என்பதில்தான் அவர்களது விருப்பமாக உள்ளது.  பிரதமர் மோடி தவறான வாக்குறுதிகளை அளித்து வருகிறார். பீகார் மாநில மக்கள் அவரை நேரடி விமானம் மூலமாக திருப்பி அனுப்பிவிட்டார்கள். அவர் லோக்சபா தேர்தலின்போது அளித்தவாக்குறுதிகளை நிறைவேற்றாததால் பீகார் மக்கள் அவருக்கு சட்டமன்ற தேர்தலில் பெரும் தோல்வியை தந்திருக்கிறார்கள். கறுப்பு பணத்தை மீட்டு உங்களுக்கு தருவதாக மோடி வாக்களித்திருந்ததை அவர் அசாம் வரும்போது கேளுங்கள். விலைவாசி கடுமையாக உயர்ந்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த தவறிவிட்டார். அசாம் மக்களுக்கு அவர் என்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார் என்று கேளுங்கள். பீகாரில் லோக்சபா தேர்தலில் தவறான வாக்குறுதிகளை அளித்து அதனை நிறைவேற்றாத மோடிக்கு சட்டமன்ற தேர்தலில் அந்த மாநில மக்கள் சரியான பாடம் கற்பித்து விட்டார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்