முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் கமல்ஹாசனுக்கு சர்வதேச சினிமா விருது பிரான்ஸ் நாட்டில் வழங்கப்பட்டது

வியாழக்கிழமை, 31 மார்ச் 2016      சினிமா
Image Unavailable

சென்னை : நடிகர் கமல்ஹாசனுக்கு திரைத்துறையில் 50 ஆண்டுகளுக்கு மேல் சேவை ஆற்றியதற்காக சர்வதேச சினிமா விருது பிரான்ஸ் நாட்டில் வழங்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டில் உள்ள சினிமா  அமைப்பு ஒன்று ஆண்டு தோறும் உலக சினிமா கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்தவகையில் இந்த  ஆண்டுக்கான ஹென்றி லாங் லாட்ஸ் விருது நடிகர் கமல்ஹாசனுக்கு  நேற்று முன் தீனம்  வழங்கப்பட்டது. 

களத்தூர் கண்ணம்மா முதல் தூங்காவனம் வரை 50 ஆண்டுகளுக்கு மேல் நடிகர் கமல்ஹாசன் திரைத்துறையில் ஆற்றிய சேவைக்காக இந்த விருது வழங்கப்பட்டது. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள  நடிகர் கமல்ஹாசன், இந்த விருது கிடைத்தது. மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் எனது குருநாதர் அனந்த் மூலமாக ஹென்றி லாங் லாட்ஸ்-ஐ அறிவேன். அவருடைய சினிமா  பணிகள் அளப்பரியது. அவர் பெயரில் எனக்கு இந்த விருது கிடைத்தது. நான் பெருமையாக நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்