முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோயிலில் வெள்ளி வாசலில் நெரிசலை குறைக்க பக்தர்கள் கோரிக்கை

சனிக்கிழமை, 2 ஏப்ரல் 2016      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை  - திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக் கிழமைதோறும் பக்தர்கள் குறை கேட்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நடந்த இந்நிகழ்ச்சியில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் பங்கேற்றார். அப்போது தொலைபேசி மூலம் பக்தர்களின் குறைகளை அவர் கேட்டறிந்தார்.

  இந்நிகழ்ச்சியின்போது சென்னை மற்றும் மும்பையை சேர்ந்த இரு பக்தர்கள், ஏழுமலையான் தரிசனத்துக்காக பிரதான கோபுரத்துக்குள் நுழைந்த பின் வெள்ளி மற்றும் தங்க வாசலை கடக்கும்போது கடும் நெரிசல் ஏற்படுவதாகவும், இத னால் பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவதாகவும் தெரிவித்தனர். மேலும் இந்த நெரிசலை குறைக்க தேவஸ்தானம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். இதற்கு பதிலளித்த சாம்பசிவ ராவ், ‘தங்க வாசல் அருகே பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ள னர். இதேபோன்று வெள்ளி வாசலிலும் வரிசை கண்டிப்பாக அமல்படுத்தப்படும், என்றார். 

மேலும், திருமலையில் பக்தர் களுக்கு கட்டாய ‘திரு நாமம்’ இட்டு பணம் பறிக்கப்பட்டு வருவது, கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு லட்டு பிரசாதம் விற்கப்படுவது ஆகிய புகார்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும் பக்தர்களின் முழு குறைகளையும் கேட்க தனி குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.  விரைவில் கோடை விடுமுறை தொடங்க இருப்பதால், பக்தர்கள் வசதியை கருத்தில் கொண்டு வரும் மே மாதம் 55,669 ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை விநியோகிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்