முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெர்மனி நாளிதழின் பனாமா ஆவணத் தகவல்களுக்கு நடிகை ஐஸ்வர்யா ராய் மறுப்பு

திங்கட்கிழமை, 4 ஏப்ரல் 2016      சினிமா
Image Unavailable

புதுடெல்லி : ஜெர்மனி நாளிதழ் ஒன்று  ‘பனாமா ஆவணங்கள்‘ என்ற தலைப்பில் வெளிட்டுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மையில்லாதது என்று நடிகை ஐஸ்வர்யா ராய் மறுப்பு தெரிவித்து உள்ளார்.

சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பின் 100 செய்தியாளர்கள், உலக நாடுகளின் பிரபல அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், நடிகர்கள், தொழில் அதிபர்கள் முறைகேடான வழியில் பனாமா வங்கிகளிலும், தொழில் நிறுவனங்களிலும் பதுக்கிய சொத்து மற்றும் பணம் பற்றி ரகசியமாக தகவல்களை திரட்டியது. ஜெர்மனி நாளிதழ் ஒன்று ‘பனாமா ஆவணங்கள்‘ என்ற பெயரில் தகவல்களை வெளியிட்டு உள்ளது. இந்திய பத்திரிக்கையும் இதுகுறித்து செய்தி வெளியிட்டு உள்ளது.

இங்கிலாந்து, ரஷியா, பாகிஸ்தான் என உலக நாட்டு தலைவர்கள் உறவினர்கள் பணம் பதுக்கிவைத்து உள்ள தகவல்கள் வெளியாகி அவர்களது தலையை உருள செய்து உள்ளது. சுமார் ஒரு கோடியே 15 லட்சம் தகவல்கள் திரட்டப்பட்டு, வெளியிடப்பட்டு இருக்கிறது. பனாமா நாட்டில் 40 ஆண்டுகளில் பணத்தை பதுக்கிய உலக நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் 2 லட்சத்து 14 ஆயிரம் பேர் பட்டியலில் இடம்பெற்று உள்ளனர். பனாமாவில் இவர்கள் குவித்த சொத்து மற்றும் பணம் ஆயிரம் கோடி லட்சங்களுக்கும் மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த ஆவணங்கள் அனைத்துமே, 35-க்கும் மேலான நாடுகளில் அலுவலங்களைக் கொண்டுள்ள பனாமாவை சேர்ந்த மொசாக் போன்செகா என்னும் சட்ட நிறுவனத்தின் வழியாக கசிந்து உள்ளது.

இந்த ஆவணங்களை கசியவிட்டது சட்டப்படி குற்றம் என்றும் இது பனாமா நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் எனவும் பனாமாநாட்டின் சட்ட நிறுவன அமைப்பினரில் ஒருவரான ரோமன் போன்செகா குறிப்பிட்டார். இந்த பட்டியலில் இந்தியாவில் இருந்து சிலரும் இடம் பெற்றிருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. தொழில் அதிபர்களின் பெயர் இடம்பெற்று உள்ளது. இந்தியாவில் பெரிதும் அறியப்பட்ட முன்னாள் உலக அழகியும், பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் மற்றும் அவருடைய மாமனார் அமிதாப் பட்சன் பெயரும் அடிப்பட்டு உள்ளது. அமிதாப் பச்சன் வெளிநாட்டு நிறுவனத்தில் இயக்குநராகவும், அவரது குடும்ப உறுப்பினர்கள் பங்குதாரராக உள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக அமிதாப் பச்சன் தரப்பில் எந்தஒரு சட்டப்பூர்வமான பதிலும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் ஐஸ்வர்யா ராயின் மீடியா பிரிவு ஆலோசகர், ஆவணங்கள் அனைத்து உண்மையில்லாதது, தவறானது என்று நிராகரித்துவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்