முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்ததால் வீட்டுகடன்- வாகன கடன் வட்டி விகிதங்கள் குறைந்தன

செவ்வாய்க்கிழமை, 5 ஏப்ரல் 2016      வர்த்தகம்
Image Unavailable

மும்பை  - ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தை 0.25சதவீதம் குறைத்ததால் வீட்டுக்கடன், வாகன கடன் வட்டி விகிதங்கள் குறைந்தன.  ரிசர்வ் வங்கி இரு மாதத்திற்கு ஒரு முறை தனது  கொள்கை நிலைகளை ஆய்வு செய்து வருகிறது.. நடப்பு நிதியாண்டில்   வங்கிகள் 0.25சதவீதம் முதல் 0.5சதவீதம் வரை வட்டியை குறைத்துள்ளது

இதனால் வாங்கும் கடனுக்கு செலுத்தும் வட்டி விகிதம் வெகுவாக குறைந்துள்ளது என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் நேற்று தெரிவித்தார். ரிசர்வ் வங்கி நேற்று தனது வட்டி விகிதத்தை 0.25சதவீதம் குறைத்திருக்கிறது. கடந்த 5ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த வட்டி நிலையான 6.5சதவீத வட்டி நிலையை தற்போது ரிசர்வ் வங்கி நிர்ணயத்துள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி முதல் 1.5சதவீத வட்டியை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. ரிசர்வ் வங்கி 6மாத கால இடைவெளியில் வட்டி குறைப்பை அறிவித்துஇருக்கிறது. இதற்கு முந்தைய கொள்கை முடிவில் ரிசர்வ் வங்கி 0.50சதவீதம் வட்டியை குறைத்திருந்தது- இந்த வட்டி குறைப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2011ம் ஆண்டு ரிசர்வ் வங்கி  வங்கிகளுக்கு அளிக்கும் கடன்களுக்கு பெறப்பட்ட வட்டி விகிதம் 6.5சதவீதமாக இருந்தது. தற்போது அதே நிலையாக 6.5சதவீத வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  ரிசர்வ் வங்கி தற்போது வட்டி விகிதத்தை குறைத்திருப்பதால் இந்தியாவின் வளர்ச்சி வலுவடையும்.

நாட்டின் மத்திய வங்கி வட்டி விகிதத்தை குறைத்தபோதும் பங்கு சந்தையில் நேற்று எதிர் மறை நிலையே காணப்பட்டது. பம்பாய் பங்கு சந்தை, சென்சக்ஸ் ஆகியவற்றின் புள்ளிகள் 400க்கும் மேல் குறைந்தன.   கடந்த ஆண்டு வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து, ரூ1லட்சத்து 13ஆயிரத்து 500 கடன் பெற்றன. இந்த ஆண்டு மார்ச் மாதம் வங்கிகள் ரூ1லட்சத்து 93ஆயிரத்து 500ஐ கடனாக பெற்றுள்ளன. புதிய வங்கிகளை துவக்குவதற்கு உரிமம் வழங்குவது குறித்தும் ரிசர்வ் வங்கி ஆலோசனை செய்து வருவதாக அந்த வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago