முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனித்துப் போட்டி: நடிகர் கார்த்திக் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 10 ஏப்ரல் 2016      அரசியல்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் 25 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட தயார் என நாடாளும் மக்கள் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக் தெரிவித்தார்.  தேர்தலில் போட்டியிடுவது குறித்து இளைஞர் அமைப்புகளோடு  சென்னையில் ஆலோசனை நடத்தினார் கார்த்திக். இதுகுறித்து அவர் கூறியதாவது:

எவ்வளவு ஓட்டு வாங்குகிறோம் என்பது எங்களுக்கு முக்கியமல்ல; எந்தக் கொள்கைக்காக களத்தில் நிற்கிறோம் என்பதுதான் முக்கியம்.  எல்லா தலைவர்களையும் மதிப்பவன் நான். அதனால் யாரையும் விமர்சிக்க மாட்டேன். எங்களது பலம் என்ன என்பது எங்களுக்குத் தெரியும். கடந்த சட்டசபை தேர்தலில் அதை நிரூபித்தும் இருக்கிறோம். அதிமுகவிடம் இருந்து எந்த நேரத்திலும் அழைப்பு வரலாம் என எதிர்பார்க்கிறோம். அதிமுக அழைத் தால் கூட்டணியில் இணைவோம். இல்லாவிட்டால் தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, மதுரை, தஞ்சை, சென்னை, நீலகிரி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் 25 தொகுதிகளில் தனித்தே போட்டியிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்