முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிதிஷ் குமாரால் ,தேசிய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் : பாபுலால் மாரண்டி

வெள்ளிக்கிழமை, 15 ஏப்ரல் 2016      அரசியல்
Image Unavailable

 புதுடெல்லி  -  ஐக்கிய ஜனதா தள தலைவரும் பீகார் மாநில முதல்வருமான நிதிஷ் குமாரால் தேசிய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும என பாபு லால் மாரண்டி கூறினார். கடந்த 2000ம் ஆண்டில்  பீகார் மாநிலம் பிரிக்கப்பட்டு ஜார்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது. அந்த மாநிலத்தின் முதல் முதல்வராக பாபுலால் மாரண்டி பதவியேற்றார்.

அவர் ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க.வில் தலைமை பொறுப்பு வகித்தவர் ஆவார்.  அவர் பா.ஜ.கவில் இருந்து  விலகிய பின்னர் பிரதமர் நரேந்திரமோடியையும் என்.டி.ஏ கூட்டணி அரசையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.  காங்கிரஸ், பா.ஜ.கவிற்கு மாற்றாக தேசிய அரசியலில்  மாற்று அரசை ஏற்படுத்த வேண்டும் என்பதில் மாரண்டி முனைப்புடன் உள்ளார். இதற்காக அவர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், அஜித் சிங்கின் ராஷ்ட்ரிய லோக்தளம், மாரண்டியின்ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா(பிரஜ் தந்திரிக்)  கமால் மோரக்காவின் சமாஜ்வாடி ஜனதா கட்சி, ஆகியவற்றை கூட்டணியாக உருவாக்க முயன்று வருகிறார் .

இந்த நிலையில் பழங்குடியின தலைவரான பாபுலால் மாரண்டி தேசிய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த நிதிஷ் குமாரால் முடியும் என தெரிவித்துள்ளார். நிதிஷ் குமாரும், லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியும் கடந்த சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அந்த கூட்டணி பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்தி பீகாரில்ஆட்சியை பிடித்துள்ளது.இந்த வெற்றியை தொடர்ந்து தங்களது கட்சியை தேசிய அளவில் விரிவுப்படுத்த வேண்டும் என நிதிஷ் குமார் திட்டமிட்டுள்ளார். இதன் பலனாகவே அவர்  பல்வேறு மாநில கட்சிகளை கொண்ட கூட்டணியை உருவாக்க முயன்று வருகிறார்.

அவரது முயற்சிக்கு பாபுலால் மாரண்டியும் உதவி வருகிறார். ஐக்கிய ஜனதா தலைவர் பதவியில் சரத் யாதவ் இருந்தார். இந்தநிலையில் அந்த கட்சியின் புதிய தலைவராக நிதிஷ் குமார் பதவியேற்று இருக்கிறார்.  வரவிருக்கும் 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பெரும் வெற்றி பெற வேண்டும் என நிதிஷ் குமார் திட்டமிட்டு இருக்கிறார். ஜார்கண்ட் மாநிலத்தில் மாரண்டி கட்சிக்கும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்திற்கும் கணிசமான செல்வாக்கு உள்ளது. இந்த சூழலில்  ஜார்கண்டில் பாவுலால் மாரண்டியை ஆதரிக்க ஐக்கிய ஜனதா தளம் முடிவு செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்