முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் விலை லிட்டருக்கு 74 காசுகள், டீசல் லிட்டருக்கு ரூ.1.30 குறைப்பு

வெள்ளிக்கிழமை, 15 ஏப்ரல் 2016      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி  - பெட்ரோல் விலை லிட்டருக்கு 74 காசுகள் குறைந்துள்ளன. அதேபோல் டீசல் விலையும் லிட்டருக்கு ரூ.1.30 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை பொறுத்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒருமுறை நிர்ணயம் செய்கின்றன. ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி மற்றும் 15-ம் தேதிகளில் இந்த விலை மாற்றம் செய்யப்படுகிறது.

அந்த வகையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 74 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன. டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.30 குறைக்கப்பட்டுள்ளது என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த புதிய விலை நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்