முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தி நடிகர் திலீப்குமார் மருத்துவமனையில் அனுமதி

சனிக்கிழமை, 16 ஏப்ரல் 2016      சினிமா
Image Unavailable

மும்பை  - நடிகர் திலீப்குமார் உடல் நலக்குறைவு காரணமாக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார் நூற்றுக்கும் மேற்பட்ட இந்திப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். ராஜ்கபூர், தர்மேந்திரா, அமிதாப் பச்சம் உட்பட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். 93 வயதாகும் திலீப்குமாருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

உடனே அவர் மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவரை பரிசோதித்ததில் நிமோனியா காய்ச்சலால் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.  அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திலீப்குமாருக்கு கடந்த ஆண்டு மத்திய அரசு பத்ம விபூஷண் விருது அளித்து கவுரவித்தது.

சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. அவரது சிறப்பான கலைத்துறை சேவைக்காக மத்திய அரசு இதற்கு முன்பு 1991ல் பத்ம பூஷண், 1994ல் தாதாசாகிப் பால்கே ஆகிய விருதுகளை வழங்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago