முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்: பெருமாள் இன்று புறப்படுகிறார்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஏப்ரல் 2016      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பரங்குன்றம் : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருவிழாவின் முத்தாய்ப்பாக வருகின்ற 19-ம் தேதி மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடக்கிறது. இதில் திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து தெய்வானையுடன் முருகப்பெருமான் மற்றும் பவளக்கனிவாய் பெருமாள் பங்கேற்பது நடைமுறையில் உள்ளது.

இதற்காக மூவரும் இன்று (18-ம் தேதி) மாலை 5 மணிக்கு திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து மேள தாளங்கள் முழங்க புறப்பட்டு மீனாட்சியம்மன் கோவிலுக்கு வருகின்றனர் இதில் மீனாட்சியம்மனின் அண்ணனாக பவளக்கனிவாய் பெருமாள் இருந்து தாரைவார்த்து கொடுக்கிறார்.

இதற்காக தனது கையில் வெள்ளியிலான கென்டியுடன் தனது இருப்பிடத்தில் இருந்து புறப்பட்டு மீனாட்சியம்மன் கோவிலுக்கு வருகிறார். வரும் வழி நெடுகிலும் ஆங்காங்கே பக்தர்கள் திருக்கண் அமைத்து சுவாமியை வழிபடுகிறார்கள். திருக்கல்யாணத்தை தொடர்ந்து வருகின்ற 23-ம் தேதி வரை மதுரையில் தங்கி இருந்து முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பிறகு அன்று மாலை 4 மணியளவில் பூப்பல்லக்கில் புறப்பட்டு இருப்பிடத்திற்கு வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்