முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டின் பண வீக்க விகிதம் 17வது மாதமாக மைனஸ் விகிதத்தில் உள்ளது

திங்கட்கிழமை, 18 ஏப்ரல் 2016      வர்த்தகம்
Image Unavailable

 புதுடெல்லி  -  நாட்டின் பணவீக்க விகிதம் 17வது மாதமாக மைனஸ் விகிதத்தில் உள்ளது. மார்ச் மாத மொத்த விற்பனை உள்ளடக்க பட்டியலில்(  டபிள்யூ.பி.ஐ) விகிதம்  மைனஸ் 085சதவீதமாக இருந்தது. கடந்த பிப்ரவரி மாதத்தில்  பண வீக்க விகிதம்  மைனஸ்0.91சதவீமாக இருந்தது. அந்த அளவை ஒப்பிடுகையில் மார்ச் மாத பணவீக்க விகிதம் அதிகரித்து இருந்தது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் பணவீக்க விகிதம்  மைனஸ்  2.23சதவீதமாக காணப்பட்டது.கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நாட்டின் மொத்தவிற்பனை  உள்ளடக்க பட்டியலின் விகிதம் மைனஸ் விகிதத்திலேயே இருக்கிறது.  இந்த ஆண்டு மார்ச் மாதம் காய்கறிகளின் விலை  மைனஸ் 2.26சதவீதமாக இருக்கிறது. அதே நேரத்தில் தானியங்கள் விலை 2.47சதவீதமாகவும்  மற்றும் பருப்பு விலை   34.45சதவீதமாகவும் காணப்பட்டது. நாட்டில் எண்ணெய் மற்றும் உற்பத்தி பொருட்களின் விலை மாற்றம் இல்லாமல் இருக்கின்றன.  தற்போது இருக்கும் உணவுப்பொருட்களின் விலை வரும் மாதங்களில் அதிகரிக்கும் கூறப்படுகிறது.

வரவிருக்கும்  மழைக்காலத்தில்  இயல்பை விட மழை அதிகமாக இருக்கும் என வானிலை மையம் கணித்திருந்தபோதும் உணவுப்பொருட்களின் விலை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த மார்ச் மாதத்தில் தானியங்களின் விலை அதிகரித்தது. கோடை காலத்தில் காய்கறிகள் விலை கடுமையாக அதிகரிக்கும் நிலை உள்ளது. பழங்களின் விலை அதிகரிக்கும். இதனால் மொத்த விற்பனை உள்ளடக்க பட்டியலில் உணவுப்பொருட்களின் விலை கூடுதலாகும்.  வரவிருக்கும் மாதம் உணவுப்பொருட்களின் விலை  சாதகமாகவே இருக்கும். வரவிருக்கும் மாதங்களில் அதன் விலை ஒற்றை இலக்கத்தில் இருக்கும் என்று இந்தியா ரேட்டிங்சின் முதன்மை பொருளாதார நிபுணர் சுனில் குமார் சின்கா தெரிவித்தார்.

 எரி பொருள் மற்றம் மின்துறையில் பணவீக்க விகிதம் மைனஸ் 8.30சதவீதமாக இருந்தது.  உற்பத்தி துறையின் பணவீக்க விகிதம் மைனஸ் 0.13சதவீதமாக மார்ச் மாதத்தில் இருந்தது. வெங்காயம் மற்றும் பழங்களின் விலை குறைவால்  காய்கறிகளின் விலையும் குறைந்தது. தொழில் துறை அமைப்பான அசோசம்  கூறுகையில், வரவிருக்கும் ராபி பருவத்தில் பருவ மழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் விலைவாசியை   அரசு கொள்கை முடிவாளர்கள் கட்டுப்படுத்த வேண்டும்எ ன தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony