முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்

புதன்கிழமை, 20 ஏப்ரல் 2016      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்றுவரும் சித்திரை திருவிழாவின் 7-ம் நாளான நேற்று மீனாட்சி அம்மன் யாளி வாகனத்திலும் சுந்தரேஸ்வரர்-பிரியாவிடை அம்மன் நந்திகேசுவரர் வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி நேற்று காலை தேரோட்டம் நடந்தது. பல்லாயிரகணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இவ்விழாவை காண பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பத்தோடு பக்தர்கள் வருவதுண்டு. இவ்விழா கடந்த 10-ம் தேதி மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் கொடி ஏற்றத்தொடன் தொடங்கியது. அதன் பிறகு அம்மனும், சுவாமியும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

எட்டாம் நாளான (17-ம் தேதி) மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிசேக விழா கோலாகலமாக நடந்தது. அன்று இரவு 7.35 மணி அளவில் விருச்சிக லக்கனத்தில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிசேகம் நடந்தது. அப்போது அம்மனுக்கு கிரீடம் சாத்தி செங்கோல் வழங்கும் விழா நடந்தது. அதன் பிறகு 18-ம் தேதி திக்விஜயம் நடந்தது.

சித்திரை விழாவின் முத்திரை பதிக்கும் விழாவாக கருதப்படும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் காலை நடந்தது. இத்திருக்கல்யாணத்தை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். சில ஆயிரம் பக்தர்களே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்ட நிலையில் கோவிலுக்கு வெளியே உள்ள பக்தர்களும் மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணத்தை கண்டு களிக்க கோவிலை சுற்றி 20 இடங்களில் அகன்ற திரையுடைய டிஜிட்டல் டி.வி.க்கள் வைக்கப்பட்டு இருந்தது.

11-ம் நாளான நேற்று திருத்தேரோட்டம் நடந்தது. கீழமாசி வீதியில் உள்ள தேர் மூட்டியில் இருந்து தேர் புறப்பட்டது. முன்னாதாக அதிகாலை 5 மணி அளவில் மேஷ லக்கனத்தில் சுவாமி அம்மன் தேரில் எழுந்தருளினர். அதன் பிறகு கணபதி பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு பெரிய தேரை கோவில் தக்கார் கருமுத்துக்கண்ணன், இணை ஆணையர் நடராஜன் ஆகியோர் வடம் பிடித்து இழத்து தொடங்கி வைத்தனர். முன்னால் பிரியாவிடையுடன் எழுந்தருளிய தேரும், அதன் பின்னால் மீனாட்சி அம்மன் தேரும் வீதி உலா வந்தது.

இத்தேர்களின் வடங்களை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இழுத்தனர். கீழமாசியில் இருந்து புறப்பட்ட தேர் தெற்குமாசி வீதி, மேற்கு மற்றும் வடக்குமாசி வீதிகள் வழியாக மீண்டும் கீழமாசி வீதி தேர்மூட்டிக்கு சென்றடைந்தது. நான்கு மாசி வீதிகளில் தேரோட்டம் நடந்தபோது அம்மன்-சுவாமிக்கு பெண்கள் கற்பூரம் ஏற்றி வழிப்பட்டனர். மாடிகளில் இருந்து பக்தர்கள் தேர்களுக்கு மலர்தூவி தரிசனம் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்