முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் சங்கத்தில் இருந்து சிம்பு விலகல்

புதன்கிழமை, 20 ஏப்ரல் 2016      சினிமா
Image Unavailable

சென்னை : தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக நடிகர் சிம்பு அறிவித்துள்ளார்.  சமீபத்தில் நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணியில் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட சிம்பு தோல்வியடைந்தார். அதன்பின்னர் நடிகர் சங்கத்தின் எந்த ஒரு நிகழ்விலும் அவர் கலந்துகொள்ளாமல் ஒதுங்கியே இருந்தார். இந்நிலையில் நடிகர் சங்க அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ள சிம்பு, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் அடிப்படை உறுப்பினர் பதவிக்கான விலகல் கடிதத்தை 22-ம் தேதி அளிக்க உள்ளார்.நடிகர் சங்கத்தில் இருந்து விலகுவது குறித்து நடிகர் சிம்பு கூறியதாவது:

பல்வேறு காரணங்களுக்காக நடிகர் சங்கத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். நடிகர்களுக்கு ஒரு பிரச்சினையென்றால் உதவத்தான் நடிகர் சங்கம் உள்ளது. ஆனால், எனக்கே ஒரு பிரச்சினை வந்தபோது நடிகர் சங்கம் ஒரு உதவியையும் செய்யவில்லை. சமீபத்தில் நடிகர் சங்கம் நடத்திய கிரிக்கெட் போட்டி என்னை மிகவும் அப்செட் ஆக்கிவிட்டது. அந்த போட்டியின் மூலம், பெரும்பாலான நடிகர்கள் ஜோக்கர்கள் ஆக்கப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார். சிம்பு தற்போது இது நம்ம ஆளு படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். இப்படம் மே மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago