முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிம்புவுக்கு நடிகர் சங்கம் உதவவில்லையா? விஷால் பதில்!

வியாழக்கிழமை, 21 ஏப்ரல் 2016      சினிமா
Image Unavailable

சென்னை  -  நடிகர் சங்கத்தில் இருந்து விலகுவதாக நடிகர் சிம்பு நேற்று தெரிவித்தார். இதற்கான காரணமாக அவர் கூறியதாவது: நடிகர்களுக்குப் பிரச்னைகள் ஏற்படும்போது உதவக்கூடிய அமைப்பான நடிகர் சங்கம் தோல்வி அடைந்துள்ளது. நான் பிரச்னைகளைச் சந்தித்தபோது நடிகர் சங்கத்திடமிருந்து எனக்கு எவ்வித உதவியும் கிடைக்கவில்லை. சமீபத்தில் நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சியும் என்னை காயப்படுத்தியுள்ளது.

பெரும்பாலான நடிகர்கள் ஜோக்கர்களாகச் சித்தரிக்கப்பட்டார்கள் என்றார். சிம்புவின் குற்றச்சாட்டு குறித்து நடிகர் சங்க பொதுச் செயலாளரான விஷால் கூறியதாவது: பீப் பாடல் பிரச்னையின்போது சிம்புவுடனும் அவருடைய தந்தை டி.ஆர். உடனும் நடிகர் சங்கத் தலைவர் நாசர், நான், கார்த்தி ஆகிய 3 பேரும் பேசினோம்.

அப்போது, பிரச்னையைச் சட்டரீதியாகச் சந்தித்துக்கொள்கிறோம் என்று அவர்கள் இருவரும் கூறிவிட்டார்கள். அதனால் நாங்கள் அந்தப் பிரச்னையில் தலையிடவில்லை. இப்போது சிம்பு நடிகர் சங்கத்திலிருந்து விலகுவதாகக் கூறியுள்ளார். இதுபற்றி வருகிற 24-ம் தேதி நடைபெற உள்ள நடிகர் சங்க செயற்குழுக் கூட்டத்தில், உறுப்பினர்களுடன் கருத்து கேட்டு ஒரு முடிவெடுக்கப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்