முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐபிஎல் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் மும்பை கிரிக்கெட் வாரியம் மனுத் தாக்கல்

வெள்ளிக்கிழமை, 22 ஏப்ரல் 2016      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி, மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து ஐ.பி.எல் போட்டிகளை வேறு மாநிலங்களுக்கு மாற்ற வேண்டும் என்ற மும்பை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து மும்பை கிரிக்கெட் வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

மராட்டிய மாநிலத்தில் கடுமையான வறட்சி நிலவுவதால் அங்கு நடைபெற இருந்த ஐ.பி.எல். போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும் என்று மும்பை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது. மைதான பராமரிப்புக்கு தண்ணீர் பயன்படுத்தப்படுவதால் வருகிற 30-ம் தேதிக்கு பிறகு நடைபெறும் ஐ.பி.எல். ஆட்டங்களை மராட்டிய மாநிலத்தில் இருந்து மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. கோர்ட்டு உத்தரவு காரணமாக 13 ஆட்டங்கள் மராட்டியத்தில் இருந்து மாற்றப்படுகிறது.

இந்த 13 ஆட்டங்களில் புனே அணியின் 4 ஆட்டம், மும்பை அணியின் 3 ஆட்டம், பஞ்சாப் அணியின் 3 ஆட்டம் அடங்கும். மேலும் பிளே ஆப்ஸ் சுற்றின் 2 ஆட்டமும், இறுதிப் போட்டியும் அங்கு நடைபெறாது. கோர்ட்டு உத்தரவுப்படி மே மாதத்தில் எந்தவித ஐ.பி.எஸ். ஆட்டத்தையும் மராட்டியத்தில் நடத்தக் கூடாது. இருப்பினும் பிசிசிஐ-ன் கோரிக்கையை ஏற்று, மே 1-ம் தேதி புனேவில் நடைபெறும் போட்டிக்கு மட்டும் மும்பை ஐகோர்ட் அனுமதி அளித்தது.

இந்நிலையில், ஐ.பி.எல் போட்டிகளை வேறு மாநிலங்களுக்கு மாற்ற வேண்டும் என்ற மும்பை ஐகோட்டின் உத்தரவை எதிர்த்து மும்பை கிரிக்கெட் வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனுத் தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை வரும் ஏப்ரல் 25-ம் தேதி(திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்