முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

25-ந்தேதி முதல் திருப்பதி கோவிலில் இலவச திருமணம் நடத்தலாம் மணமக்களுக்கு விரைவு தரிசனம்

சனிக்கிழமை, 23 ஏப்ரல் 2016      ஆன்மிகம்
Image Unavailable

நகரி  - திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திருமணம் செய்துகொண்டால் அனைத்து தோசங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் திருமலையில் திருமணம் செய்ய பலர் முன் வருகிறார்கள். திருமலையில் பாபவிநாசம் தீர்த்தம், அருகே திருமண மேடை உள்ளது.

இங்கு நடக்கும் திருமணத்துக்கு தேவஸ்தானம் சார்பில் புரோகிதர்கள், மேளக்காரர்கள் ஏற்பாடு செய்யப்படும். புரோகிதருக்கு ரூ.500-ம், மேளக்காரருக்கு ரூ.300-ம், வீடியோ எடுக்க பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு ரூ.60-ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இதனை இலவசமாக வழங்க தேவஸ்தானம் பரீசீலனை செய்து வந்தது.  இலவச திருமண திட்டத்தை நாளை 25-ந்தேதி முதல் அமல்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதோடு மணமக்கள் மற்றும் அவரது பெற்றோர்கள் விரைவு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் சுபதம் வழியாக மூலவரை தரிசிக்கலாம்.

மேற்கண்ட தகவலை முதன்மை நிர்வாக அதிகாரி சாம்பசிவராவ் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:- வருங்காலத்தில் இந்த இலவச திருமண திட்டத்தில் மேலும் சில மாற்றங்கள் கொண்டு வர தேவஸ்தானம் ஆலோசனை செய்து வருகிறது. திருமணம் செய்து கொள்ளும் மணமக்களுக்கு மஞ்சள், குங்குமம், கங்கனம் மற்றும் சிறிய லட்டு பிரசாதம் வழங்கப்படும். திருமணத்தை முன்பதிவு செய்ய ஆன்லைனில் தனி ஆப்சன் ஏற்படுத்தப்படும். அதோடு தங்கும் அறை, திருமணத்துக்கு தேவையான பொருட்கள் இலவசமாக கொடுக்கவும் பரீசீலனை செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்