முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்தோர் எண்ணிக்கை ஒரு கோடி பேர் !

சனிக்கிழமை, 23 ஏப்ரல் 2016      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி  - பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று ஒரே ஆண்டில் ஒருகோடிக்கும் அதிகமானவர்கள் சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. வசதி படைத்த மக்கள் தங்களது எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுக்க வேண்டும், அதன்மூலம் வசதியில்லாத பலகோடி ஏழை, எளிய மக்களுக்கு மானிய விலையில் எரிவாயு சிலிண்டர்களை மத்திய அரசால் வழங்க முடியும் என பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு மார்ச் மாதம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

தற்போதைய நிலவரப்படி, மானிய விலையில் எரிவாயு சிலிண்டர்களை பெறுபவர்கள் ஆண்டொன்றுக்கு 12 சிலிண்டர்களை வாங்க முடியும். அவ்வகையில், ஒரு நுகர்வோருக்கு மட்டும் ஆண்டொன்றுக்கு சுமார் ஆயிரம் ரூபாயை மத்திய அரசு மானியமாக ஒதுக்கி வருகிறது. இந்நிலையில், வசதி படைத்த மக்கள் தங்களது எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் என பிரதமர் மோடி விடுத்திருந்த வேண்டுகோளை ஏற்று ஒரு கோடியே ஆறாயிரத்துக்கும் அதிகமானவர்கள் மானியத்தை துறந்துள்ளதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் சுமார் 15 கோடி மக்கள் மானிய விலை எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தி வருகின்றனர். அவர்களில் ஒருகோடி பேர் தற்போது மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளதால் அரசின் நிதிச்சுமை ஓரளவுக்கு குறைந்துள்ளது, குறிப்பிடத்தக்கது. தலைநகர் டெல்லி நிலவரப்படி, மானியத்துடன் கிடைக்கும் 14.2 கிலோ எரிவாயுடன் கூடிய சிலிண்டரின் விலை ரூ.419.30 ஆக உள்ளது. அதேவேளையில், மானியமல்லாத சிலிண்டரின் வெளிச்சந்தை விலை ரூ.509.50 ஆக உள்ளது. மானிய விலையில் வழங்கப்படும் ஒரு சிலிண்டர் மூலம் மட்டும் அரசுக்கு ரூ.90.20 இழப்பு ஏற்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்