முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியர்களை அவமதிப்பதா ? டொனால்டு டிரம்ப் மீது ஹிலாரி கிளின்டன் ஆதரவாளர்கள் கடும் தாக்கு

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2016      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  -  இந்தியர்களை அவமதிக்கும் வகையில் குடியரசு கட்சி யின் டொனால்டு டிரம்ப் பேசி உள்ளார். அவர் பிரிவினை வாத நிலையை கடை பிடிப்பது கண்டிக்கத்தக்கது என்று ஜனநாயக கட்சி ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் முன்னணியில் உள்ள ஹிலாரி கிளின்டன்  ஆதவாளர்கள்குற்றம் சாட்டினர். அமெரிக்காவில் தற்போது ஜனாதிபதியாக உள்ள ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டு முடிவடைகிறது. அவர் 2முறை ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளார்.

அமெரிக்க அரசியல் சட்டப்படி ஒருவர் இரண்டு முறைக்கு மேல் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியாது . எனவே அவரது ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட ஹிலாரி கிளின்டன் பிரச்சாரம் செய்கிறார். அவரைப்போன்று குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட விரும்பும் டிரம்ப்பும் பிரச்சாரம் செய்து வருகிறார்.

அவர் தனது பிரச்சாரத்தில் இந்தியர்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து ஹிலாரி கிளின்டன் ஆதரவாளர்கள்கூறுகையில், இந்திய சமூகத்தினரை அவமதிக்கும் வகையில் டொனால்டு டிரம்ப் பேசியுள்ளார்.  இது பிரிவினையை ஏற்படுத்தி விடும். டிரம்ப் பிரச்சாரம் அமெரிக்காவிற்கே ஆபத்தை ஏற்படுத்தி விடும். இந்தியாவுடன் நெருங்கிய கூட்டாளியாக இருக்க வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது. ஆனால் டிரம்ப் அவர்களை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்