முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2020-ல் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான சின்னம் வெளியீடு

செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2016      உலகம்
Image Unavailable

டோக்கியோ : 2020-ல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான சின்னம் நேற்று வெளியிடப்பட்டது. 2020-ம் ஆண்டு ஜப்பானியத் தலைநகர் டோக்யோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான சின்னம் முதலில் வெளியிடப்பட்டவுடன் பெரிய வரவேற்பை பெற்றாலும், பின்னர் சர்ச்சையில் சிக்கியது. பெல்ஜிய நாடக நிறுவனம் ஒன்றின் சின்னம் போலவே முதலில் வெளியான சின்னம் இருந்தது, அதை உருவாக்கியவர் அடுத்தவருடைய படைப்பை நேர்மையற்ற வகையில் பயன்படுத்துகிறார் எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதையடுத்து டோக்யோ ஒலிம்பிக் போட்டிகள் ஏற்பாட்டுக்குழு, தேர்தெடுக்கப்பட்ட அந்தச் சின்னத்தை விலக்கிக் கொள்வதாக அறிவித்தது. நேற்று அப்போட்டிகளுக்கான புதிய சின்னம் வெளியானது. அதில் பல கட்டங்கள் இசைவாக இணைந்து வட்டவடிவமாகவும், பாரலிம்பிக் போட்டிக்கான சின்னத்தில் இடையே ஒரு சிறு இடைவெளியுடனும் காணப்படுகின்றன.

உலகின் பல நாடுகளில் சரித்திரபூர்வமாக சதுரம், செவ்வகம், மற்றும் நாற்கோணங்களைக் கொண்ட வடிவங்கள் பிரபலமாக இருக்கின்றன என போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர். பல நாடுகளின் கலாச்சாரங்கள், சிந்தனைகள் ஆகியவற்றையும் புதிய சின்னம் பிரதிபலிக்கிறது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

'வேற்றுமையில் ஒற்றுமை' எனும் செய்தியையும் டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளுக்கானச் சின்னம் வெளிக்காட்டுகிறது எனவும் ஜப்பானிய ஒலிம்பிக் சம்மேளனம் தெரிவித்துள்ளது. உலகெங்கும் அனைவரும் பங்குபெறும் வகையில் நடத்தப்பட்ட போட்டி ஒன்றின் மூலம் புதிய சின்னம் தேர்தெடுக்கப்பட்டது. இறுதியாக அசௌ டோகோலோ சமர்ப்பித்திருந்த வடிவம் தேர்தெடுக்கப்பட்டு நேற்று அறிவிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago