முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சரியான வேகத்தில் பந்துவீச முடியாமல் திணறுகிறார் அஸ்வின்: பிளமிங் குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2016      விளையாட்டு
Image Unavailable

ஐதராபாத் : ’பவர் பிளே’ ஓவர்களில் சரியான வேகத்தில் பந்துவீச முடியாமல் திணறுகிறார் அஸ்வின் என்று புனே அணியின் பயிற்சியாளர் பிளமிங் குற்றச்சாட்டியுள்ளார். ஐ.பி.எல்.லில் டோனி தலைமையிலான புதிய அணியான புனேக்கு ஆடி வரும் தமிழக வீரர் அஸ்வினின் செயல்பாடு குறித்து தற்போது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், புனே அணியின் பயிற்சியாளர் பிளமிங்கும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

தமிழக வீரரான அஸ்வின் சென்னை அணிக்காக விளையாடி வந்தார். அந்த அணிக்கு 2 வருடங்கள் தடைவிதிக்கப்பட்ட நிலையில், டோனி தலைமையிலான புதிய அணியான புனேக்கு ஆடி வருகிறார். இந்நிலையில் சமீபத்திய போட்டிகளில் அஸ்வினின் செயல்பாடு மோசமாக உள்ளது. தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் ஓட்டங்களை அள்ளிக் கொடுத்த அஸ்வின் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை.

டோனி தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. அதனை தொடர்ந்து நடந்த லீக் ஆட்டங்களில் 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் லயன்ஸ் அணியிடமும், 6 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடமும், 13 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியிடமும், 2 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடமும் அடுத்தடுத்து புனே அணி தோல்வியை கண்டு துவண்டு போயிள்ளது.

இந்நிலையில் புனே அணியின் பயிற்சியாளர் பிளமிங் அஸ்வின் குறித்து கூறுகையில்,  எங்கள் அணியின் முன்னணி பந்துவீச்சாளர் அஸ்வினின் செயல்பாடு ஏமாற்றமாக உள்ளது. அவர் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் முற்றிலும் ஏமாற்றினார். ’பவர் பிளே’ ஓவர்களில் சரியான வேகத்தில் பந்துவீச முடியாமல் திணறுகிறார். அடுத்தப் போட்டியில் சிறப்பாக செயல்படுவார் என்று நினைக்கிறேன். ஆடுகளங்கள் கைகொடுக்காத நிலையில், பவுலர்கள் தங்களை மாற்றிக்கொள்ள நினைக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்