முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நட்சத்திர கிரிக்கெட்டில் அஜித் கலந்து கொள்ளாதது ஏன்?: நடிகர் சங்கம் விளக்கம்

புதன்கிழமை, 27 ஏப்ரல் 2016      சினிமா
Image Unavailable

சென்னை  - நட்சத்திர கிரிக்கெட்டில் அஜித் கலந்துகொள்ளாதது குறித்து நடிகர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டட நிதிக்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் கடந்த வாரம் நடைபெற்றது. அதில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், நாகார்ஜுனா, சிவராஜ்குமார் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நடிகர்கள் சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம்ரவி, விஜய்சேதுபதி, ஜீவா, ஆர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோர் தலைமையிலான அணிகள் போட்டியிட்டன. இந்த நிகழ்ச்சியில் அஜித் கலந்துகொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்நிலையில் நடிகர் சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களை நேற்று  சந்தித்தார்கள். அப்போது நடிகர் சங்க துணைத் தலைவர் பொன்வண்ணன் கூறியதாவது:

பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை என்பதைக் கொள்கையாக வைத்துள்ளார் அஜித். கடந்த சிலவருடங்களாக அதைக் கடைப்பிடித்தும்வருகிறார். அதனால் நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவில்லை. நடிகர் சங்கம் மீது அஜித் அதிருப்தியில் உள்ளதாக வதந்திகள்தான் வெளிவந்தன. ஆனால் நட்சத்திர கிரிக்கெட் குறித்து அஜித் எந்தவொரு பேட்டியோ, அறிக்கையோ வெளியிடவில்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்