முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.கே.நகர் ஜெயலலிதாவுக்கு ஆதரவு: நடிகர் கார்த்திக்கின் கட்சி 30 இடங்களில் போட்டி

புதன்கிழமை, 27 ஏப்ரல் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைவரான நடிகர் கார்த்திக் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டியிட விரும்பியது. ஆனால், இரட்டை இலக்க தொகுதிகளை கேட்டதால் அந்த அணியில் இடம் பெறவில்லை. தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க முடியாததால் அவர் ஆறு சிறிய கட்சிகளை இணைத்து விடியல் கூட்டணியை உருவாக்கினார்.

இந்த தேர்தலில் போட்டியிடக் கூடாது என்ற மனநிலையில் இருந்த நடிகர் கார்த்திக்கின் முடிவில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.  தேர்தலில் போட்டியிட அவர் முடிவு செய்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்த கட்சி நேற்று  வெளியிட்டு உள்ளது. தென்மாவட்டங்களில்  30 தொகுதிகளில் நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று நடிகர் கார்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் - அமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் அவருக்கு நாடாளும் மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து கார்த்திக் கூறும்போது, ‘முதல் - அமைச்சர் மீது முழுமையான மரியாதை வைத்து உள்ளோம். இதனால் அவருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்துவது இல்லை என்று முடிவு செய்துள்ளோம்’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago