முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடும் எதிர்ப்புகளையும் மீறி நடந்த வடகொரியாவின் ஏவுகணை சோதனை

வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2016      உலகம்
Image Unavailable

பியாங்கியாங் - ஐ.நா. சபையின் பொருளாதார தடைகளையும், உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. 3 முறை அணு குண்டு சோதனைகளை நடத்திய அந்த நாடு, கடந்த ஜனவரி மாதம் ஹைட்ரஜன் குண்டை வெடித்து சோதித்து உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நடவடிக்கைக்காக ஐ.நா. சபையும், அமெரிக்காவும் அந்த நாட்டின் மீது புதிய பொருளாதார தடைகளை விதித்து சமீபத்தில் நடவடிக்கை எடுத்தன. ஆனாலும், அதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தி வருகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன் வடகொரியா தனது  நாட்டின் தேசத்தந்தை பிறந்த நாளில் ஏவுகணை சோதனை நடத்த முயன்றது. ஆனால், அது தோல்வியை தழுவியது. இந்த நிலையில், நடுத்தர தூரம் செல்லும் ஏவுகணை ஒன்றை வட கொரியா நேற்று மீண்டும் பரிசோதிக்க முயற்சித்தது. ஆனால், வடகொரியாவின் இந்த முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது. அந்நாட்டில் உள்ள கிழக்கு கடற்கரையான வான்சன் பகுதியில் உள்ளூர் நேரப்படி காலை 6.40 மணிக்கு இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. ஆனால், ஏவுகணை ஏவப்பட்ட ஒரு சில நொடிகளில் திட்டமிட்டபடி செல்லாமல் தோல்வியை தழுவியது  இந்த தகவலை தென்கொரியாவின் பாதுகாப்பு அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்