முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈக்வடார் பூகம்பத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய மோப்பநாய் பலி

வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2016      உலகம்
Image Unavailable

குய்டோ - தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் ஏற்பட்ட பூகம்பத்தில் இடிபாடுகளில் சிக்கியவர்களை காப்பாற்றிய மோப்ப நாய் திடீரென மரணம் அடைந்தது. தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் கடந்த வாரம் 7.8 ரிக்டரில் பூகம்பம் ஏற்பட்டது. அதில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாயின. அதில் சிக்கி 654 பேர் பலியாகினர். 58 பேரை காணவில்லை. இடிபாடுகளில் சிக்கியவர்களை காப்பாற்றும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் டைகோ என்ற மோப்ப நாயும் ஈடுபட்டது. 4 வயதான அந்த நாய் லாப்ரேடர் இனத்தை சேர்ந்தது.

அது இடிபாடுகளுக்குள் நுழைந்து சிக்கியவர்களை கண்டுபிடித்து மீட்க பேருதவி புரிந்தது. எனவே, அந்த நாய் ‘ஹீரோ’ என வர்ணிக்கப்பட்டது. பலரது உயிரை காப்பாற்றிய அந்த நாய் பணியின் போது திடீரென மயங்கி விழுந்தது. உடனே அதை கால்நடை டாக்டர்கள் பரிசோதித்து சிகிச்சை அளித்தனர். இருந்தும் அந்த நாய் பரிதாபமாக இறந்து விட்டது. கடுமையான வெப்பம் தாங்காமல் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மரணம் அடைந்த மோப்ப நாய் டைகோவுக்கு தீயணைப்பு படை வீரர்கள் புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்