முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்க நகைகளுக்கு உள்ள 1சதவீத கலால் வரியை ரத்து செய்ய முடியாது அரசு உறுதி

வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  -  வெள்ளி அல்லாத நகைகளுக்குஉள்ள 1சதவீத கலால் வரியை ரத்து செய்ய முடியாது என்று அரசு திட்டவட்டமாக தெரிவித்தது. சொகுசு பொருட்களுக்கு வரி விலக்க முடியாது என்று ராஜ்யசபையில் அரசு தெரிவித்தபோது, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தார்கள்.

நகைத்தொழிலில் 1சதவீத கலால் வரி விதிப்பதால் அந்த தொழிலை அழிக்கும் என எதிர்கட்சிகள் நேற்று ராஜ்யசபையில்குற்றம் சாட்டின. இந்த குற்றச்சாட்டை நிராகரித்த நிதியமைச்சர் அருண்ஜெட்லி சாதாரண பயன்பாட்டில் உள்ள பொருட்களுக்கே வரி விதிக்கும்போது ஆடம்பர பொருட்களுக்கு வரி விதிக்காமல் இருக்க முடியாது என்றார். நகை கைவினைஞர்களுக்கு எந்த வித சித்ரவதையும் நடக்க வில்லை .

கடந்த ஆண்டு கார்ப்பரேட் நகை நிறுவனங்களுக்கு ரூ 12கோடி வரையிலான வியாபாரத்திற்கும் இந்த நிதியாண்டிற்கு ரூ 6 கோடிவரையிலான வியாபாரித்திற்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது இந்த வரிவிதிப்பு பகுதிக்குள் சிறிய நகை தொழிலாளர்கள் வரமாட்டார்கள் என்றும் ஜெட்லி கூறினார். கடந்த 2005ம்ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நகைகளுக்கு வரி விதித்தது- இதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டதால் இந்த வரி கடந்த 2009ம் ஆண்டு விலக்கிக்கொள்ளப்பட்டது. ஆனால் 2012ம் ஆண்டில் வரி விதிக்கப்பட்டு பின்னர் விலக்கிக்கொள்ளப்பட்டது என்றும் ஜெட்லி ராஜ்யசபையில் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்