முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடல் -விமானப்போக்குவரத்தில் உதவும் செயற்கைக் கோள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது

வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2016      இந்தியா
Image Unavailable

ஶ்ரீஹரிகோட்டா  -  விமானப்போக்குவரத்தில் உதவும் செயற்கைக்கோள் நேற்று விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.சென்னை அருகே உள்ள ஶ்ரீஹரி கோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இந்தியாவின் 7வது வழிகாட்டி செயற்கைக்கோள் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஜி நேற் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.

இந்த செயற்கைக்கோள் இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி.-33ராக்கெட் மூலம் விண்ணில் ஏவபட்டது. ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் மதியம் 12.50மணிக்கு  இந்த ராக்கெட் சீறி பாய்ந்து செயற்கைக்கோளை புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தியது.1425கிலோ எடைகொண்ட செயற்கைக்கோளை விண்ணில் ஏவ கடந்த செவ்வாய்க்கிழமைகாலை 9.20மணிக்கு கவுன்ட் டவுன் தொடங்கியது.  51.30மணிநேர கவுன்ட் டவுனுக்கு பிறகு ராக்கெட் நேற்று மதியம் விண்ணில் சீறி பாய்ந்தது.

பிராந்திய செயற்கைக்கோள் வழிகாட்டி அமைப்பில்  7விண்கலங்கள் உள்ளன. இதில் மக்கள் பயன்பாட்டுக்கான  செயற்கைக் கோளை இந்தியா அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதர  நாடுகள் தங்கள் நாட்டு ராணுவத்திற்காகவும் இதர வர்த்தக பயன்பாட்டிற்காகவும் விண்கலங்களை அனுப்பியுள்ளன.இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தற்போது ஏவியுள்ள ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கைக் கோள்  24மணி நேரமும்  கடல், வான், போக்குவரத்து சேவைக்கான தகவல்களை அளிக்கக்கூடியதாகும்.அவசர தேவையை கருத்தில் கொண்டு இரு செயற்கைக்கோள்கள் தயார் நிலையில் உள்ளன. அவை முழு தரை கட்டுப்பாட்டு மையத்தினை கொண்டவை ஆகும்.

தற்போது அனுப்பப்பட்டுள்ள செயற்கைக்கோள் 12ஆண்டு ஆயுள் காலம் கொண்டதாகும்.இதற்கு முன்னர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்(இஸ்ரோ)கடந்த 2013ம் ஆண்டு ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1 ஏ செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. இதனைத்தொடர்ந்து இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1இ செயற்கைக்கோளும் மார்ச் மாதம் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1எப் செயற்கைக்கோளும் விண்ணில்  ஏவபட்டன. இந்த செயற்கைக் கோள்கள் இந்திய போக்குவரத்திற்கு வழிகாட்டும் செயற்கைக் கோள்களாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டிருந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்