முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பப்புவா நியூகினியா நாட்டிற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சென்றார்

வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2016      இந்தியா
Image Unavailable

போர்ட் மோர்ஸ்பை(பப்புவா நியூகினியா)  -  பப்புவா நியூகினியா நாட்டிற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று சென்றார். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.  ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி   தற்போது வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டுள்ளார். அவர் தனது பயணத்தின் முதல் கட்டமாக பப்புவா நியூகினியா நாட்டிற்கு நேற்று சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவரை அந்த நாட்டின் துணை பிரதமர் லியோ டியான் வரவேற்றார்.  பப்புவா நியூகினியாவில் அளிக்கப்பட்ட 21குண்டு முழங்க நடந்த வரவேற்பு மரியாதையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பார்வையிட்டார். பசிபிக் தீவு நாடுகளில் சீனா தனது ஆதிக்கத்தை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அதற்கு பதிலடி தரும் வகையில் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பப்புவா நியூகினியா நாட்டிற்கு சென்றுள்ளார்.

அந்த தீவுநாட்டில்  சுகாதாரத்துறை சந்தையில் அடியெடுத்து வைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. ஜனாதிபதியின் இந்த பயணத்தையொட்டி, சுகாதாரத்துறையில் ஒத்துழைப்பு, மருத்துவ அறிவியலில் ஒப்பந்தம் மேற்கொள்ள இந்திய அரசு அனுமதித்துள்ளது. ஜனாதிபதியின் இந்த பயணத்தின் மூலம் இந்திய மருந்து நிறுவனங்கள் தங்கள் வியாபாரங்களை பப்புவா நியூகினியா நாட்டில் மேற்கொள்ள முடியும். பப்புவா நியூகினியா நாட்டின் மொத்த மக்கள் தொகை  70 லட்சம் ஆகும் . அங்கு எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ளனர். அங்கு மருத்துவ செலவு அதிகம் என்பதால் அந்த நாட்டின் மக்கள் ஆயுட்காலமும் குறைவு ஆகும்.

பப்புவா நியூகினியா பயணத்தை முடித்துக்கொண்டு பிரணாப் முகர்ஜி நாளை(ஏப்.30) நியூசிலாந்து நாட்டிற்கு தனது பயணத்தின் 2வது கட்டமாக செல்கிறார்.  இந்தியாவும் நியூசிலாந்தும் வேளாண்துறை, பால், உணவு பதப்படுத்துதல், கல்வி, திறன் மேம்பாடு துறைகளில் ஒத்துழைப்பு மேற்கொள்வதற்கான வாய்ப்புகளை ஆராய்கின்றன. நியூசிலாந்து பிரதமர் ஜான் கீ கடந்த 2011ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தார். அந்த நாட்டின் கவர்னர் ஜெனரல் கடந்த 2008, 2009, 2011ம்ஆண்டுகளில் இந்தியாவிற்கு வந்தார். அந்த நாட்டிற்கு சென்ற கடைசி இந்திய தலைவர் ராஜீவ் காந்தி ஆவார். அவர் கடந்த 1986ம் ஆண்டு நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்