முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு முதல்வர் ஜெயலலிதா இன்று விழுப்புரத்தில் தேர்தல் பிரச்சாரம்

வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2016      தமிழகம்
Image Unavailable

மதுரை  - தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று விழுப்புரத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அவரது வருகையை கட்சியினரும், பொதுமக்களும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 16-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான, வேட்புமனு தாக்கல் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. இன்று வேட்புமனு தாக்கல் செய்யும் பணி முடிகிறது. தேர்தலை முன்னிட்டு, கூட்டணி அமைப்பது, வேட்பாளர்களை தேர்வு செய்வது போன்ற பணிகளை முடித்துவிட்டு அரசியல் தலைவர்கள் பிரச்சாரக் களத்தில் குதித்தனர். முதல்வர் ஜெயலலிதா தனது பிரச்சாரத்தை கடந்த 9-ம் தேதி சென்னை தீவுத்திடலில் தொடங்கினார்.  அப்போது, தன்னையும் சேர்த்து 21 அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அதைதொடர்ந்து, விருத்தாசலம், தருமபுரி, அருப்பக்கோட்டை, காஞ்சிபுரம், சேலம், திருச்சி, புதுச்சேரி ஆகிய இடங்களில் தனது சூறாவளி பிரச்சாரத்தை முடித்து கொண்ட முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் நான்மாடக்கூடல் என போற்றப்படும் மதுரை மாநகரில் நடந்த பிரமாண்ட பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர் முல்லை பெரியாறு பிரச்சனை, ஜல்லிகட்டு விவகாரம் ஆகியவற்றை தமிழக மக்களுக்கு தி.மு.க. செய்த துரோகங்களை தோலுரித்து காட்டினார். கிரானைட் ஊழலை மூடி மறைத்ததும் தி.மு.க. ஆட்சிதான் என்றும் சுட்டிகாட்டிய முதல்வர் தனது ஆட்சியில் தான் செய்த சாதனைகளையும் பட்டியலிட்டார். இந்நிலையில், இன்று முதல்வர் ஜெயலலிதா விழுப்புரத்தில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம் தனி, வானூர், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி தனி, திருவண்ணாமலை உள்ளிட்ட 13 தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா பேசுகிறார். அவரது கூட்டத்தை முன்னிட்டு பிரமாண்ட மேடையும், முகப்பும் அமைக்கப்பட்டுள்ளது. முதல்வரின் வருகையை கட்சியினரும், பொதுமக்களும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்