முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2ம் உலகப்போரில் இறந்த இந்திய வீரர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பப்புவா நியூகினியாவில் அஞ்சலி

வெள்ளிக்கிழமை, 29 ஏப்ரல் 2016      உலகம்
Image Unavailable

போர்ட் மோர்ஸ் பை(பப்புவா நியூகினியா):  2ம் உலகப்போரின் போது உயிர் நீத்த பல இந்திய வீரர்கள் உள்ளிட்ட வீரர்களுக்கு பப்புவா நியூ கினியாநாட்டில் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி அஞ்சலி செலுத்தினார். ஜனாதிபதி தற்போது 2கட்ட வெளிநாடு பயணத்தை மேற்கொண்டுள்ளார். அவர் தனது முதல் கட்டபயணமாக பப்புவா நியூகினியா தீவு நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

அந்த நாட்டுடன் சீனா தனது நெருக்கத்தை அதிகரித்துக்கொண்டுள்ள நிலையில் தற்போது அங்கு இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சென்றுள்ளார். அவரது பயணத்தின் மூலம் இந்திய மருந்து நிறுவனங்கள் அங்கு தங்கள் மருந்து பொருட்களை வர்த்தகம் செய்ய முடியும். பப்புவா நியூகினியா தீவு நாட்டில் ஜனாதிபதி நேற்று பொம்னா நினைவிடத்திற்கு சென்றார்.

2ம் உலகப்போரில் உயிர் நீத்த இந்திய வீரர்கள் உள்ளிட்ட போர் வீரர்களுக்கு அவர் அஞ்சலி செலுத்தும் வகையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்திய முப்படைகளின் தலைவரான ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நினைவிட கோபுரத்திற்கு நடந்து சென்று மலர் வளையத்தினை வைத்தார்.  பப்புவா நாட்டிற்கு ஜனாதிபதியின்  2வது நாள் நிகழ்ச்சியாக இது உள்ளது.

அவர் நேற்று முன்தினம் அந்த நாட்டிற்கு வந்தார். பசிபிக் பகுதியில் மிகப் பெரும் தீவான பப்புவா நியூகினியா நாட்டிற்கு  வந்த முதல் ஜனாதிபதி என்ற பெருமையும் பிரணாப் முகர்ஜிக்கு உண்டு. ஜனாதிபதி பிரணாப் பப்புவா நியூகினியாவின் ஜனாதிபதி சர் மைக்கேல் ஓகியோவை சந்தித்த பின்னர் உடனடியாக வீரர்கள் நினைவிடத்திற்கு வந்தார். இந்த நினைவிடம் தலைநகர் போர்ட் மோர்ஸ் பை யில் இருந்து  20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

பிரணாப் முகர்ஜி வீரர்கள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்ததும், பப்புவா நியூகினியா பாதுகாப்பு படையின் வாத்திய இசைக்குழு  வீரர்களின் கடைசிப்பயணத்தை குறிக்கும் வகையில் லாஸ்ட் போஸ்ட் இசையை ஒலித்தனர். 2ம் உலகப்போரில் இறந்த வீரர்களின் நினைவிடத்தில் காமன்வெல்த் நாடுகளின்  3ஆயிரத்து 824வீரர்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன.

இந்த உடல்களில் 699பேர் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பது அடையாளம் காணப்படவில்லை. 2ம் உலகப்போரின் போது  பிரிக்கப்படாத இந்தியாவின் 250 வீரர்கள் பிரிட்டிஷ் படைகளுடன் சேர்ந்து போரிட்டார்கள். 2ம் உலகப்போரின் போது, ஜப்பான் படைகளை எதிர்த்து பப்புவா நியூகியா நாட்டில் இருந்து காமன் வெல்த் நாடுகளின் வீரர்கள்  1942ம்ஆண்டில்போரிட்டார்கள்.

இந்த போர்  போர்ட் மோர்ஸ் பை நகரில் நடந்தது. ஜப்பானிய படையினர் பப்புவா நியூகினியாவை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்திலேயே அங்கு வந்தார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்