முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி மேல்-சபையில் நடிகர் சுரேஷ்கோபி எம்.பி.யாக பதவியேற்றார்

வெள்ளிக்கிழமை, 29 ஏப்ரல் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசு கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் விளையாட்டுத்துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு டெல்லி மேல்-சபை நியமன எம்.பி. பதவி வழங்க முடிவு செய்தது. அதன்படி சுப்பிரமணியசுவாமி, குத்துச்சண்டை வீரர் மேரிகோம், பத்திரிக்கையாளர் ஸ்வாபான் தாஸ்குப்தா, கிரிக்கெட் வீரர் சித்து, நரேந்திர ஜாதவ் மற்றும் மலையாள நடிகர் சுரேஷ்கோபி ஆகியோர் இதற்கு பரிந்துரை செய்யப்பட்டனர். இவ்ரகளை மேல்-சபை நியமன எம்.பி. யாக்க ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி ஒப்புதல் அளித்தார்.

இதையடுத்து இன்று டெல்லியில் நடந்த விழாவில் மலையாள நடிகர் சுரேஷ்கோபி உள்ளிட்டவர்கள் மேல்-சபை எம்.பி. யாக பதவியேற்றுக் கொண்டனர். இதன் மூலம் மலையாள திரையுளகில் இருந்து டெல்லி மேல்-சபைக்கு எம்.பியாக தேர்வு செய்யப்பட்ட முதல் நபர் என்ற பெருமை நடிகர் சுரேஷ்கோபிக்கு கிடைத்தது.  கேரளாவில் பாரதீய ஜனதா கட்சியை வளர்த்தெடுக்க கட்சி மேலியம் தீவிர முயற்சி மேற்க்கொண்டுள்ளது. அதன் ஒருபடியாகவே சுரேஷ்கோபிக்கு மேல்-சபை எம்.பி. பதவி வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

டெல்லியில் மத்திய மந்திரி சபையை பிரதமர் மோடி விரைவில் மாற்றி அமைப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் சுரேஷ்கோபிக்கும் மத்திய மந்திரி சபையில் இடம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு சுரேஷ்கோபி மந்திரியானால் அதுவும் நியமன எம்.பி. ஒருவர் மந்திரியாக பொறுப்பேற்ற பெருமை கேரளாவுக்கு கிடைக்கும். இந்த பதவியேற்பு விழாவில் சுரேஷ்கோபியின் மனைவி மற்றும் மகள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்