முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு சட்டசபை தேர்தல்: வேட்பு மனுதாக்கல் முடிந்தது

வெள்ளிக்கிழமை, 29 ஏப்ரல் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை  -  தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நேற்று  மாலை மூன்று மணியுடன் முடிவடைந்தது. தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (மே) 16-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ந்தேதி தொடங்கியது. அ.தி.மு.க., தி.மு.க., தே.மு. தி.க.- மக்கள் நலக்கூட்டணி, பா.ம.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேட்சைகள் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில்  நேற்று  (வெள்ளிக்கிழமை) 6-வது நாளாக வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., தே.மு.தி.க. - மக்கள் நலக் கூட்டணி, பா.ம.க. கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துவிட்ட நிலையில்  நேற்று  பெரும்பாலும் சுயேட்சை வேட்பாளர்களே மனுக்கள் கொடுத்தனர்.அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் மாற்று வேட்பாளர்கள் பலரும்  நேற்று  வேட்புமனு கொடுத்தனர். ஏற்கனவே மனு கொடுத்திருந்தவர்கள் இறுதி நாளான  நேற்று  தேவையான ஆவணங்களை கொண்டு வந்து கொடுத்தனர். இதனால் தேர்தல் அதிகாரிகளின் அலுவலகங்களில் கடும் கூட்டம் காணப்பட்டது. மைலாப்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கராத்தே தியாகராஜன் உள்பட சில முக்கிய பிரமுகர்களும்  நேற்று  வேட்பு மனு தாக்கல் செய்தனர். 

நேற்று  பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிந்தது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலினை இன்று   (சனிக்கிழமை) நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெற மே 2-ந்தேதி கடைசி நாளாகும். அன்று அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கான மாற்று வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை திரும்பப் பெறுவார்கள். அந்தவகையில் சுமார் ஆயிரம் பேருக்கு மேல் வேட்புமனுக்களை திரும்பப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மனுக்கள் வாபஸ் பெறுவது முடிந்ததும் அன்று மாலையே 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். 

தமிழக சட்டசபை தேர்தல்கள வரலாற்றில் 1971 ஆண்டு தேர்தலில் மொத்தமே 748 பேர்தான் போட்டியிட்டனர். அவர்களில் பெண் வேட்பாளர்கள் 15 பேர்தான். 1977-ல் 1390 பேர், 1980-ல் 1029 பேர், 1984-ல் 1499 பேர், 1989-ல் 3046 பேர், 1991-ல் 2834 பேர், 1996-ல் 5017 பேர், 2001-ல் 1860 பேர் போட்டியிட்டனர். 2006-ம் ஆண்டு 2584 பேரும் கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் 2748 பேரும் போட்டியிட்டனர்.இந்த ஆண்டு வேட்பாளர்கள் எண்ணிக்கை சற்று உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கையும் உயரக்கூடும் என்று தெரிகிறது.

வேட்பாளர் இறுதிப்பட்டியல் அறிவிக்கப்பட்ட பிறகு பிரச்சாரம் செய்ய இரு வாரங்கள் அவகாசம் உள்ளது. 14-ந்தேதி மாலை பிரசாரம் நிறைவு பெறும்.16-ந்தேதி ஓட்டுப்பதிவு நடத்தப்படும். 19-ந்தேதி ஓட்டுகள் எண்ணி முடிவுகள் வெளியிடப்படும். அன்று மதியமே தமிழகத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார்? என்பது தெரிந்து விடும்.இதையடுத்து மே 21-ந் தேதியுடன் தேர்தல் நடவடிக்கைகள் நிறைவு பெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago