முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒலிம்பிக் தூதராக சல்மான்கான் நியமனம் குறித்த கருத்து கூற விராட் கோலி மறுப்பு

வெள்ளிக்கிழமை, 29 ஏப்ரல் 2016      இந்தியா
Image Unavailable

ஹைதராபாத்  -  பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய அணியின் நல்லெண்ண தூதராக நடிகர் சல்மான்கான் நியமிக்கப்பட்டதற்கு இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி  கருத்து தெரிவிக்க மறுத்தார். இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோலி நேற்று ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

 ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய விளையாட்டு குழுவிற்கு இந்தி நடிகர் சல்மான்கான் தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் தூதராக நியமிக்கப்பட்டது குறித்து நான் எந்த வித கருத்தும் தெரிவிக்கும் நிலையில் இல்லை. நான் எதை கூறினாலும் அது  செய்தியில் பரபரப்பாக வெளியாகும்.

அவர் ஒலிம்பிக் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டது சரியா, தவறா என்பது பற்றி கருத்து கூற முடியாது. அவர் தூதராக நியமிக்கப்பட்டது குறித்து பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். நான் கருத்து கூறுவதால் தற்போதைய முடிவில் எந்த வித மாற்றமும் வரப்போவதில்லை. எனவே நான் கருத்துதெரிவிக்கும் நிலையிலும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்