முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் நிறைவேற்றப்பட்ட பணிகள் :முதல்வர் ஜெயலலிதா பட்டியலிட்டு பேச்சு

வெள்ளிக்கிழமை, 29 ஏப்ரல் 2016      தமிழகம்
Image Unavailable

விழுப்புரம்  - விழுப்புரத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் நிறைவேற்றப்பட்ட பணிகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா பட்டியலிட்டு பேசினார். இதுகுறித்து அவர் பேசியதாவது., விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் நிறைவேற்றப்பட்ட பணிகள்: விழுப்புரம் மாவட்டத்தில்  ஒசூடு பறவைகள் சரணாலயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலை மற்றும் போளூர் ஆகிய இடங்களில் ரயில்வே மேம்பாலங்கள் அமைப்பதற்கான ஆரம்பக் கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோயில் கிரிவலப் பாதையை அகலப்படுத்தும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.  விழுப்புரம் மாவட்டத்தில் கடவு எண். 111 மற்றும் 102-ல் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

திருவண்ணாமலை மற்றும் திருக்கோவிலூர்  நகரங்களில் புறவழிச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டம் காட்டு வனஞ்சுர் பகுதியில் தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டுள்ளது.   விரைவில் மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தொழிற்சாலைகள் அமையப் பெறும். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளன.  

  விழுப்புரம் மாவட்டத்தில் புதியதாக விளையாட்டு விடுதி ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.  திருவண்ணாமலையில் அரசு மருத்துவக் கல்லூரி துவங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் நகராட்சி குடிநீர் அபிவிருத்தித் திட்டம் 9 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு உள்ளது.  திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு வேளாண்மை கல்லூரி துவங்கப்பட்டுள்ளது.  கள்ளக்குறிச்சியில் ஓர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், சங்கராபுரத்தில் ஒரு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியும் தொடங்கப்பட்டுள்ளன. 

திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைக் கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. திருவண்ணாமலை குடிநீர் மேம்பாட்டுத் திட்டம் 37 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், திருவண்ணாமலை நகராட்சி பாதாள சாக்கடைத் திட்டம் 38 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் விழுப்புரம் நகராட்சி பாதாள சாக்கடைத் திட்டம் 49 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் நிறைவேற்றப்பட்டுள்ளன.  106 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணிகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்