முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆன்லைன் மூலம் ஓட்டுநர் உரிமம்: மத்திய அரசு திட்டம்

சனிக்கிழமை, 30 ஏப்ரல் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு நடைமுறைகளை ஆன்லைனில் செயல்படுத்துவது குறித்து மத்திய அரசு தீவிரமாக திட்டமிட்டு வருகிறது.

லேர்னர் லைசன்ஸ் (எல்.எல்.ஆர்.) வழங்குவதற்கான தேர்வையும் ஆன்லைன் மூலம் நடத்த அரசு திட்டமிட்டு வருகிறது. மேலும், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தலையும் ஆன்லைனில் செயற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது குறித்து சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது,
பல்வேறு உரிமங்களைப் பெறுவதற்காக பொது மக்கள் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்பதே இலக்கு. எனவேதான் ஓட்டுநர் உரிமம் பெறுதல் போன்ற நடவடிக்கைகளை ஆன்லைன் மூலமே முடிக்க வேண்டும் என திட்டமிட்டு வருகிறோம். ஓட்டுநர் பயிற்சி பள்ளி முதல்வர்கள் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து விண்ணப்பதாரர்களுக்கு பயிற்றுவிப்பர் ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்