முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5-வது கட்ட தேர்தல் : மேற்குவங்கத்தில் 78.25 சதவீதம் வாக்குப்பதிவு

சனிக்கிழமை, 30 ஏப்ரல் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : மேற்குவங்கத்தில் நேற்று நடந்த 5-வது மற்றும் கடைசி கட்ட தேர்தலுக்கு முந்தைய வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. நேற்று மாலை வரை 78.25 சதவீதம் வாக்குப்பதிவானது.

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு நேற்று நடந்த 5-வது கட்ட தேர்தல் அமைதியாக நடந்தது. எனினும் 2 தலைமை அதிகாரி மற்றும் வாக்காளர்களை மிரட்டியதாக வந்த புகாரை தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது.

நேற்று நடந்த வாக்குப்பதிவு குறித்து மேற்குவங்க தேர்தல் அதிகாரியும், தேர்தல் ஆணையத்தின் துணை கமிஷ்னருமான சந்தீப் சக்சேனா இது குறித்து தெரிவிக்கையில், தேர்தல் அதிகாரிகளிடமிருந்து எஸ்.எம்.எஸ். மூலம் வந்த தகவலின் படி நேற்று மாலை 5 மணி வரை 78.25 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தெரிவித்தார்.

கடந்த 2011-ம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஹூக்ளி, கொல்கத்தா தெற்கு மாவட்டம், தெற்கு பர்கானாஸ் மாவட்டங்களில் பதிவான 82.77 சதவீத வாக்குகளுக்கு அடுத்ததாக நேற்று நடந்த தேர்தலில் அதிகமாக பதிவான வாக்கு சதவீதம் இதுவாகும். 2014 பாராளுமன்ற தேர்தலில் 80.22 சதவீதம் வாக்குகள் பதிவானதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்றை வாக்குப்பதிவின் போது, 3 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாகவும், இதை தவிர்த்து தேர்தல் அமைதியாக நடைப்பெற்றது. மேலும்  தேர்தல் வன்முறை தொடர்பாக இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். எதிர்கட்சியை சேர்ந்த வேட்பாளர் மீது ஷூ-வை எறியுமாறு, தனது தொண்டர்களிடம் சொன்னதாக வாக்காளர்கள் அளித்த புகாரை அடுத்து, எசத்காச்சியா சட்டப்பேரவை வேட்பாளரான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நடிகை சோனாலி குகா மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு உதவியதாக தேர்தல் அதிகாரிகள் தர்கேஷ்வர் மற்றும் அரம்பாக் மீது மற்றொரு எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்