முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல்: புனே அணியை வீழ்த்தி குஜராத் லயன்ஸ் த்ரில் வெற்றி

சனிக்கிழமை, 30 ஏப்ரல் 2016      விளையாட்டு
Image Unavailable

புனே : புனே அணிக்கு எதிரான 25-வது ஐ.பி.எல். லீக் போட்டியில் குஜராத் லயன்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்டீவ் ஸ்மித்தின் அதிரடி சதம் வீணானது. ஐ.பி.எல். தொடரின் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் ரெய்னாவின் குஜராத் லயன்ஸ் அணியும், டோனியின் புனே அணியும் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ரெய்னா முதலில் பந்து வீச முடிவு செய்தார்.

புனே அணிக்கு ரகானேவும், திவாரியும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஒரு ரன்னில் திவாரி எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார். இதன் பின்னர் ரகானேவுடன் ஸ்டீவ் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். ரகானே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, ஸ்மித் அதிரடியாக விளையாடினார். ஸ்மித் 29 பந்துகளில் அரைசதம் விளாச, 43 பந்துகளில் ரகானே அரைசதம் கடந்தார். இருப்பினும் பிராவோவின் அற்புதமான துரோவால் ரகானே 45 பந்தில் 53) ரன்கள் எடுத்த போது ஆட்டமிழந்தார்.

அப்போது 13.4 ஓவர்களில் புனே அணி 124 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து ஸ்மித்துடன் கேப்டன் டோனி இணைந்தார். இருவரும் குஜராத் வீரர்களின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறிடித்தனர். தொடர்ந்து அதிரடி காட்டிய ஸ்மித் 19.2-வது ஓவரில் 53 பந்துகளில் சதம் அடித்தார். இருப்பினும் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். ஸ்மித் 54 பந்துகளில் 101 ரன்கள் குவித்தார். அதில், 5 சிக்ஸர்களும், 8 பவுண்டரிகளும் அடங்கும். இறுதியில் புனே அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது.கேப்டன் டோனி 18 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதில் 2 சிக்ஸர்களும், 2 பவுண்டர்களும் அடங்கும். பெரேரா 3 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

புனேவை தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணிக்கு டுவைன் ஸ்மித், பிரண்டன் மெக்கல்லம் ஜோடி அதிரடி துவக்கம் தந்தது. மெக்கல்லம் 43 ரன்கள் குவித்தார். டுவைன் ஸ்மித் 63 ரன்கள் சேர்த்தார். தினேஷ் கார்த்திக் 33 ரன்கள் விளாசினார்.மற்ற வீரர்கள் ரன் குவிக்க தவறியதால், கடைசி ஓவரில் குஜராத் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைபட்டது. அந்த ஓவரை பெரேரா வீசினார். அந்த ஓவரில் ரெய்னாவை வீழத்தினார். அவர் 28 பந்தில் 34 ரன்கள் எடுத்தார். அடுத்த வந்த கிஸான் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இறுதியில் 1 பந்தில் 1 ரன் எடுக்க வேண்டிய சூழலில் ஏற்பட்டது. அப்போது பால்க்னர் நேர்த்தியாக தட்டிவிட்டு ஒரு ரன் எடுத்து குஜராத் வெற்றியை உறுதி செய்தார். இதனால் குஜராத் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பால்க்னர் (9), பிரவீண்குமார் (0) அவுட் ஆகாமல் இருந்தனர். சிறப்பாக ஆடிய குஜ்ராத் அணியின் டி.ஆர்.ஸ்மித் ஆட்டநாயனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago