முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாரணாசி சென்றார் பிரதமர் மோடி: நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு இ-ரிக்ஷா வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 1 மே 2016      இந்தியா
Image Unavailable

வாரணாசி:  பிரதமர் மோடி தனது எம்.பி.தொகுதியான வாரணாசிக்கு நேற்று சென்றார். அவரது பயணத்தையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த பயணத்தின் போது அவர் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு இ-ரிக் ஷா வழங்கினார்.

பிரதமர் மோடி உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யானார். அவர் கடந்த 2014ம்ஆண்டு மே மாதம் நடந்த லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று வாரணாசி மக்களவை தொகுதி உறுப்பினரானார். அவர் வெற்றி பெற்ற பின்னர் 7து முறையாக நேற்று வாரணாசிக்கு வந்தார். அவரது வருகையையொட்டி வாரணாசியில் சிறப்பு பாதுகாப்பு படையினர் கடந்த சில நாட்களாக முகாமிட்டுள்ளனர்.  அவர்கள் பிரதமரின் சிறப்புபாதுகாப்பு பிரிவில் இருப்பவர்கள் ஆவார்கள்.  

பிரதமரின் வருகையையொட்டி உத்தரபிரதேச மாநில போலீஸ் சார்பில் 15 போலீஸ் சூப்பிரண்டுகள், 23 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 58 டி.எஸ்.பிக்கள்  மற்றும் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.  அவர்களைத்தவிர அதிரடிப்படையினர், மாகாண ஆயுதப்படை பிரிவு, ஊர் காவல் படை, ஆகியோரும் பாதுகாப்பு பணிக்கு வந்திருந்தார்கள்.  கடற்படையின் வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படை, ஆகியோர் கங்கை கரைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்தார்கள்.

அங்கு பிரதமர் மோடி 11 சூரிய மின்சார படகுகளை துவங்கி வைத்தார்.  வாரணாசியில் அவர் 6மணிநேரம் இருந்தார். அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு இ-ரிக்ஷாக்கள் வழங்கினார். பின்னர் அவர் அங்குள்ள நிபுணர்களுடன் கலந்துரையாடினார்.  கலாச்சார கல்வி மையத்திற்கு சென்ற பிரதமர் மோடி அங்கு தொடர்ந்து126மணி நேரம் கதக் ஆடி கின்னஸ் சாதனை படைத்த  சோனி சவுரசியா என்ற பெண்ணை பாராட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்